ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும்
மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப்
போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான், இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். மத்தேயு
5:19
1) கற்பனைகளை
மீறுகிறவர்களுக்கு பரலோக ராஜ்யத்தில் இடம் உண்டா?
2) அங்கே
பெரியவன், சிறியவன் என்ற
பட்சபாதம் உண்டா?
ஆனாலும் என்
வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு
ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல. என்றார். மாற்கு 10:40
*பதில்:*
முதல் கேள்விக்கான பதில்)
*‘லூ’* என்ற கிரேக்க வார்த்தைக்கு தமிழ் வார்த்தை *மீறி *என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
*லூ* என்ற கிரேக்க வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் - அலட்சியமாக /
கலைத்து / கறைத்து / இலகுவாக்கி என்பது.
*எலச்சிஸ்டோஸ்* என்ற கிரேக்க வார்த்தைக்கு தமிழ் வார்த்தை *சிறியவன்*
என்று மொழி பெயர்க்கபட்டுள்ளது.
*எலச்சிஸ்டோஸ்* என்ற கிரேக்க வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் – மிக
சிறிய / ஒன்றுமில்லாமை / எண்ணிக்கையில் வராதவை / வடசொலில் சைபர் – பூஜ்யம் என்று பொருள்.
தேவனுடைய சிறிய கட்டளையை மீறுவது மாத்திரம் அல்ல அலட்சியமாக
அல்லது தனக்கு சாதகமாக வளைத்தோ இளக்கியோ கறைத்தோ கடைபிடிப்பவர்களோ – அப்படி போதிப்பவர்களோ, பரலோக இராஜ்ஜியத்தில் ஒன்றுமில்லாதவர் என்று கணக்கிடப்படுவர்
– அதாவது உள்ளே அவர்களுக்கு இடமில்லை என்று பொருள். இதன் ஊர்ஜீதத்தை அடுத்த வசனத்திலேயே
ஆண்டவர் தெளிவு படுத்தியிருப்பதை காணமுடியும் !! (மத் 5:20)
*இரண்டாம் கேள்விக்கான பதில்*
மத். 20:13-16ம் வசனத்தின் அடிப்படையில் பார்க்கும் போது வித்தியாசமே
இருக்காது என்று தோன்றுகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக