#84 - *சாத்தான் எப்போது தள்ளப்பட்டான் ?*
1) நாம் அறிவோம் ஆதாம் ஏவாளை வஞ்சிகிறதற்காக ஏதேன் தோட்டத்தில் பிசாசு வந்தான் என்று.. பிசாசு தள்ளப்பட்ட பிறகுதான் அவனுக்கு cunningness வந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.. 2)As per history says Abraham lived in BC 2100 to 1800 range, Job lived in 1650 to 1500 range. 3) Am having doubt in வெளி 12:10 (இதற்கும் விளக்கம் pls.. குற்றம் சுமத்துகிறவன் தாழ தள்ளப்பட்டுபோனான் என்று.. இது நடந்தது எப்பொழுது..
*பதில்*:
நிச்சயமாக ஆதியாகமம் 3ம் அதிகாரத்திற்கு முன்பே சாத்தான் *கெட்டுப் போயிருக்க வேண்டும்*. யோ. 8:44
ஆனால் ஆதாம் விழுவதற்கு முன்னதாக சாத்தான் பாவத்தில் விழுந்தான் என்று சொல்லமுடியுமா? எசே. 28:13-15ல் அவன் ஏதேன் தோட்டத்தில் நல்லவனாக இருந்தான் என்று பார்க்கமுடிகிறது !
தேவன், ஆதாமோடும் ஏவாளோடும் அன்பாய் உறவாடுவதை பொறுக்காமல் அவன் தன் இருதயத்தில் கெட்டுப்போயிருக்கலாம். வேதாகமத்தில் இல்லாதவைகளை நாம் யூகிக்க முடியாது !
கீழே உள்ள வசனத்தை கவனிக்கவும்:
1இரா. 22:19-23 அப்பொழுது அவன் (மிகாயா தீர்க்கதரிசி) சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.
தேவன் தம் சிங்காசனத்தில் உட்கார்ந்து இருந்த போது அவருக்கு முன்பாக பரலோகத்தின் எல்லா சேனையும் வந்து நின்றது என்று மிகாயா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். பரலோகத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றி நாம் இங்கு பார்க்கிறோம்.
அப்போது அவர்கள் நடுவே உள்ள ஆவிகளில் பொய் பேசும் ஆவியும் இருந்ததை குறிப்பிடுகிறார்.
அதாவது - பரலோகத்தில் தீமை செய்த ஆவியை சகித்த காலம் ஒன்று இருந்ததை இங்கு காண்கிறோம்.
இந்த நிலைமை மாறிவிட்டது என்று நாம் நிச்சயம் வேத பகுதியிலிருந்து அறியமுடிகிறது.
இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து பரலோகத்திற்குத் திரும்பிய பிறகு நடந்த இந்த சம்பவத்தை கீழே உள்ள வேதபகுதியில் காணவும் :
வெளி. 12:5 சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெளி. 12:6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
வெளி. 12:7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
வெளி. 12:8 வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
வெளி. 12:9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
வெளி. 12:10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.
தேவன் நீதியுள்ளவர் (1யோ. 1: 5)
நாம் பாவம் செய்வதால் - அது தேவனை பரிசுத்த குறைவாக்காது..
தேவதூதர்கள் பாவம் செய்ததால் - அதுவும் தேவனை பரிசுத்த குறைவாக்காது.
பாவம் செய்தவர்களும் இரட்சிக்கப்பட்டவர்கள் யாவருமே ஒரு நாள் *(நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும்) தேவனுக்கு முன்பாக* நியாயந்தீர்க்கப்பட வேண்டும்,
*பிசாசு அவர் அருகே வந்தாலும் அவரது பரிசுத்த நிலை ஒருபோது மாறாதது தானே* !!
*குறிப்பாக எப்போது சாத்தான் கீழே தள்ளப்பட்டான் என்ற கேள்விக்கு?* :
பூமிக்கு இயேசுவின் முதல் வருகையில் இது நிகழ்ந்தது.
“லூக். 10: 18 அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.”
இதன் மூலம் உலகில் சாத்தானின் பிடி மின்னல் போல் வேகமாக நழுவி வருகிறது என்று இயேசு குறிப்பிட்டார். இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் அவனது முதன்மையான சக்தி அழிக்கப்பட்டது.
எபி. 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
எபி. 2:15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
மேலே குறிப்பிட்ட வெளி. 12:7-10 வசனங்களிலும் அதைக் காண்கிறோம்.
மேற்சொன்ன இந்த வசனச் சூழல் சபை ஸ்தாபகத்தின் உருவக விளக்கத்தில் உள்ளது.
கிறிஸ்தவர்கள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் (சிலுவையில் இயேசுவின் மரணம்) ஜெயிக்க முடிந்தது என்பதைக் கவனியுங்கள்.
சாத்தானைத் தூக்கியெறிந்து, கிறிஸ்துவை அதன் ஆட்சியாளராகக் கொண்ட தேவ ராஜ்யம் வந்துவிட்டது.
இது இயேசு தனது சபையைப் பற்றி சொன்னதைப் போன்றது.
மத். 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
தனது ராஜ்யத்தை இயேசுவினிடத்தினின்றும் அவரைப் பின்பற்றுபவர்களிடத்தினின்றும் சாத்தானால் போர்புரிந்து ஜெயம் கொள்ளவே முடியாது.
அவனது முடிவு உறுதியாக இருந்தாலும், சாத்தான் தனது முயற்சியை இன்னும் கைவிடவில்லை.
அதனாலேயே சாத்தான் கோபமடைந்து தனது குறுகிய நேரத்தை முன்னிட்டு மிக அதிக ஆக்ரோஷத்தோடு உந்துகிறான் என்று பூமிக்கு ஒரு எச்சரிக்கை உள்ளது. இப்போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” 1பேதுரு 5:8
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக