#116 கேள்வி:
வெளிபடுத்தல்
20:12ல் வரும் புத்தகம் மற்றும் ஜீவ புத்தகம் எவைகளை குறிக்கிறது?
பதில்
:
வெளி
20:11-15 – தேவனுடைய நியாயதீர்ப்பின் சம்பவத்தை குறிக்கும் பகுதியாகும்.
இந்த இரண்டு புத்தகங்களில் எழுதபட்டவைகளின் அடிப்படையில் தீர்ப்பு இருக்கும்.
அதில் ஒன்று
ஜீவ புத்தகம்.
யாத்
32:32-33ல் மோசே அதை குறிப்பிடுகிறார். நீதிமான்களின் பெயர் இந்த புத்தகத்தில் இருக்கும்
(பிலி 4:3, லூக்கா
17:20)
எழுதப்பட்ட
பெயர்கள் எடுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது (வெளி 3:5, யாத் 32:32-33; சங் 69:28, 109:13)
மற்றொன்று
– தேவனுடைய வார்த்தை.
இயேசு கிறிஸ்து
சொன்னார் – அவர் சொன்ன வசனமே கடைசி நாளில் நியாயந்தீர்க்கும் (யோ 12:48). அப்போஸ்தலரின்
எழுத்துக்களும் அதில் இருக்கும் (ரோ 2:16).
மரித்தோர்
யாவரும் தாங்கள் செய்த செய்கைகளுக்குதக்கதாக – இந்த புத்தகத்தில் எழுதப்பட்டவைகளின்
அடிப்படையில் நியாயதீர்ப்பு இருக்கும். (1பேது 1:7, ரோ 2:6-11, 2கொரி 5:10)
ஜீவ புத்தகத்தில்
காணபடாதவர்கள் யாவரும், சாத்தானும், அவன் கூட்டாளிகளும்,
கள்ள தீர்ககதரிசிகளும்
மரணமும் பாதாளமும் அக்கினி கடலில் தள்ளப்படுவார்கள், மாற்கு 9:47-48.
இந்த
கேள்விக்காய் நன்றி பிரதர்
எடி ஜோயல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக