ஞாயிறு, 14 மே, 2023

#1195 - முக்காடு போடுவதைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் தெளிவாய் சொல்லியிருப்பதால், பெண்கள் பொட்டு வைக்கக்கூடாதென்றால் அதையும் தெளிவாகவே சொல்லியிருப்பார் (1கொரி. 4:6). ஆகவே, கிறிஸ்தவ பெண்கள் பொட்டு வைக்கலாம் என்பதை புரிந்து செயல்படுங்கள் என்று ஒரு ஊழியர் சொல்கிறார் – விளக்கவும்.

#1195 - *முக்காடு போடுவதைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் தெளிவாய் சொல்லியிருப்பதால், பெண்கள் பொட்டு வைக்கக்கூடாதென்றால் அதையும் தெளிவாகவே சொல்லியிருப்பார் (1கொரி. 4:6).  ஆகவே, கிறிஸ்தவ பெண்கள் பொட்டு வைக்கலாம் என்பதை புரிந்து செயல்படுங்கள் என்று ஒரு ஊழியர் சொல்கிறார் – விளக்கவும்.*

*பதில்* : யாருக்கு அவர் ஊழியர் என்பதை முதலாவது அறியவேண்டும்.

நெற்றியில் வகைவகையாய் பொட்டு வைத்துக்கொள்வது இந்துக்களின் முறை. சிவப்பு, மஞ்சள், வெள்ளை, சாம்பல் நிறம் என்று அவர்கள் தங்கள் கோட்பாட்டையும் தங்கள் பிரிவையும் தங்கள் ஜனங்களுக்கு மத்தியில் தங்களை வேறுபடுத்திக் காண்பிக்கும்படிக்கு அவர்கள் கடைபிடிக்கும் ஒரு கொள்கை.

கிறிஸ்தவத்தில் அந்த கொள்கையை கொண்டு கலப்படம் செய்வதற்கு எவருக்கும் அனுமதியில்லை. வெளி. 3:16

கிறிஸ்தவர்கள் பொட்டு வைக்கக்கூடாதென்பதைக் குறித்து தெளிவாய் நமது கேள்வி பதில் எண் #293ல் வாசித்துப்பார்க்கவும்.

எதை செய்தாலும் அதை தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது. 1கொரி. 10:31

எரே. 10:1-2 இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்: *புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்;* வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.

உபா. 12:3031 … இந்த ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்தபடி நானும் சேவிப்பேன் என்று சொல்லி அவர்களுடைய தேவர்களைக்குறித்துக் கேட்டு விசாரியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; …

சிகரெட் (புகை) பிடிப்பதைப் பற்றி வேதம் சொல்லவில்லை; எனவே, சிகரெட் (புகை) பிடிப்பதில் தவறு இல்லை என்றும் இவர் கூடிய சீக்கிரம் சொன்னாலும் சொல்லுவாரோ?
இதைக் குறித்த தெளிவான பதிலுக்கு கேள்வி பதில் எண் #591ஐ படிக்கவும்.

விலையேறப்பெற்ற மற்ற ஆத்துமாக்களையும் சீரழிக்காமல், சீக்கிரம் இவர் சத்தியத்தை அறிந்து இரட்சிக்கப்படுவார் என்று நம்புகிறேன். யாக். 3:1

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக