#1200 - *பாலஸ்தீனா மற்றும் இஸ்ரேல் நாட்டினருக்கும் இடையே கொடூரமாக போர் நடந்துக்கொண்டிருக்கும் இக்காலத்தில் இஸ்ரேல் தேசத்திற்காக நாம் ஊக்கமாய் ஜெபம் பண்ணவேண்டும் என்று நீங்கள் ஏன் வலியுறுத்துவதில்லை?*
*பதில்* : உண்மையான கிறிஸ்தவனாய் இருப்பவர்கள் இவ்வாறு இஸ்ரேலுக்காய் மாத்திரம் ஜெபிக்கவேண்டும் என்று சொல்லமாட்டார்கள்.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இரு பிரிவினரும் தங்களது உண்மை தன்மையை உணர்ந்து உடனடியாக போரை நிறுத்தும்படிக்கு ஊக்கமாய் தேவனிடம் ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம்.
பல ஆயிரக்கணக்கான ஜனங்கள், குழந்தைகள் இந்த போரில் மரித்தும் படுகாயமுற்றும் வருகின்றனர்.
வேதாகமத்தை சரியாய் உணராதவர்கள், இக்கால இஸ்ரவேலர்களை, தேவன் கி.மு.விலுள்ள இஸ்ரவேலருக்கு துணையாய் இருந்தது போல இப்பொழுதும் இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இவர்களது பரிதாபம் என்னவென்றால் வாக்குத்தத்தத்தின்படி கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தபொழுது (கலா. 3:16), தங்களை தாங்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அவர்கள் சொல்லிக்கொண்டாலும் பிரமாணத்தின்படியாக வந்த இயேசுவை கிறிஸ்துவாக இஸ்ரவேலர்கள்/ யூதர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து அவரை எதிர்த்தனர். யோ. 8:39.
இயேசுவை, கிறிஸ்து என்று சொல்லவே மாட்டார்கள். கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் (இரட்சகர்/ மீட்பர்) என்று பொருள்; இதற்கு மேசியா என்பது எபிரேய சொல். லூக்கா 2:11, யோ. 1:41
கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றியது யார்? இஸ்ரவேலர்களே.
புறஜாதியனான பிலாத்து இயேசு கிறிஸ்துவை விடுதலை செய்ய எத்தனித்த போதும்கூட இவர்கள் அவனை எதிர்த்து கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றினார்கள்.
குற்றமில்லாத இரத்தத்தை நான் தண்டிக்கமாட்டேன் அது தனக்கு பாவம் என்று பயந்த அந்த புறஜாதியனான பிலாத்துவிடம் வீரமாக இந்த இஸ்ரவேலர்கள் அந்த பாவம் எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் மீதும் வரட்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்கள். மத். 27:24
மேலும், கிறிஸ்துவின் இரட்சிப்பு அனைவருக்குமானது. யூதர்களாயினும் புறஜாதியினராயினும் யாரானாலும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இரட்சிப்பு. அப். 5:27-32.
கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். *இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ*, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக. கலா. 6:15-16
மாம்சத்தின்படி யூதர்களோ அல்லது இஸ்ரவேலர்களோ அதினால் எந்த முன்னுரிமையும் இரட்சிப்பில் கொடுக்கப்படுவதில்லை.
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். கலா. 3:26-29
கிறிஸ்து அந்த ஜனங்களை பார்த்து சொன்ன வசனத்தையும் கவனிக்கவும்:
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத். 23:37-39
உனக்குள் சந்ததி முழுவதும் அசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதி பூமிக்குறியது அல்ல. அது ஆன்மீகத்திற்கான ஆசீர்வாதம்.
இஸ்ரவேல் புத்திரருக்கு கானான் தேசத்தை வாக்களித்தார். (யோசுவா 1:1-9) அது வாக்குறுதியின் தேசம் முழுவதையும் உள்ளடக்கியது.
தேவன் இஸ்ரவேல் புத்திரரிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் "நிறைவேற்றப்பட்டது" என்று யோசுவா பின்னர் கூறினார் (யோசுவா 24:14-16, 1இரா. 4:21).
ஆனால், தேவனை அவர்கள் மறந்தால் அவர்கள் தங்கள் தேசத்தை இழப்பார்கள் என்று தேவன் எச்சரித்திருந்தார். உபாகமம் 30:15-20
தீர்க்கதரிசி ஏசாயா 66:7-13ல், புதிய சீயோனில் உள்ள ஆசீர்வாதங்களைப் பற்றி எழுதினார். இது சபை மற்றும் கிறிஸ்தவ யுகத்தைக் குறித்தது. இதை நிறைவேற்றுவது ஆவிக்குரியது. உலகத்திற்கான இடத்தை அல்ல.
இஸ்ரேலுக்கு நிலம் இருந்தது ஆனால் அவர்களின் கீழ்படியாமையால் அதை இழந்தார்கள்.
ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் இறுதியில் கிறிஸ்துவில் முழுமையாக நிறைவேறியது. கலாத்தியர் 3:16
விசுவாசத்தின் பிதாக்களான அனைவரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், *அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே*. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே. எபி. 11:13-16
கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையில் தேவன் இஸ்ரேல் தேசத்தை உடல் ரீதியாக மீட்டெடுப்பார் அல்லது யூதர்களை கானான் மற்றும் எருசலேம் தேசத்திற்கு மீட்டெடுப்பார் என்ற எந்த குறிப்பும் இல்லை.
ஆகவே, அனைத்து ஜனங்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பவேண்டும் என்று ஜெபிக்க வேண்டியது நமது கடமை.
உடனடியாக பலருக்கு ரோமர் 11:26ம் வசனம் ஞாபகத்திற்கு வரும்.
ரோ. 11:26 இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;
இந்த வசனத்தை தவறான நோக்கத்தில் புரிந்துக்கொள்ளக்கூடாது.
இரட்சிக்கப்படும் உண்மையான இஸ்ரேல் – சபை.
முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவது கிறிஸ்துவின் சுவிசேஷத்தினாலேயே. ரோ. 1:2
மாம்சத்தில் வெறும் யூதனாக இருப்பது காப்பாற்றாது.
இதயத்தில் விருத்தசேதனம் பெற்றவனே உண்மையான யூதன். (ரோமர் 2:28-29). எனவே, உண்மையான யூதர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது. ரோ. 8:28-29
இந்தியாவை போன்று, மற்ற நாடுகளை போன்றே நாம் காணும் இஸ்ரேல் தேசமும் உலகத்திற்குரியது.
அவர்களும் கிறிஸ்துவை விசுவாசித்து மனந்திரும்பவேண்டியது அவசியம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக