திங்கள், 8 மே, 2023

#1194 – CDஐ தொட்டவுடன் கீழே விழுகிறார்கள், போதகரின் கை பட்டதும் கீழே விழுகிறார்கள், மேடையிலிருந்து கையசைத்தவுடன் கூட்டமே விழுகிறதே? இதற்கு வேதாகம விளக்கம் என்ன?

*#1194 – CDஐ தொட்டவுடன் கீழே விழுகிறார்கள், போதகரின் கை பட்டதும் கீழே விழுகிறார்கள், மேடையிலிருந்து கையசைத்தவுடன் கூட்டமே விழுகிறதே? இதற்கு வேதாகம விளக்கம் என்ன?*

*பதில்* : வேதாகமத்துடன் இதை அவர்கள் எப்படி சம்பந்தப்படுத்துகிறார்கள் என்று அவர்களிடமே நீங்கள் கேட்கலாம்.

பரிசுத்த ஆவியானவர் தந்தருளப்பட்டபோது நடந்த வெளிப்படையான அடையாளங்களையும், கீழே விழந்தபோதெல்லாம் நடந்த சம்பவங்களையும் பட்டியலிடுகிறேன்:

A- *பரிசுத்த ஆவியானவர் தந்தருளப்பட்டபோது நடந்த வெளிப்படையான அடையாளங்கள்* :

*1*-
அப். 2:2-4 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே *வெவ்வேறு பாஷைகளிலே* பேசத்தொடங்கினார்கள்.

*எதை பேசினார்கள்*?
அப். 2:11 - தேவனுடைய மகத்துவங்களைப் பேசினார்கள்.

*கூடியிருந்தவர்களுக்குப் புரிந்ததா*?
அங்குள்ள அனைவரும் தங்கள் சொந்த பாஷையில் பேசுவதைக் கேட்டு பிரமித்தார்கள். அப். 2:6, 11

*2*-
பரிசேயர்களாலும், அதிகாரிகளாலும் சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் பயமுறுத்தப்பட்டபோது, தேவனிடம் ஜெபிக்கிறார்கள். அவர்களை தேவன் அவர்களை பரிசத்த ஆவியினால் நிரப்பி திடப்படுத்துகிறார். அப். 4:23-24

*எதை பேசினார்கள்*?

தேவ வசனத்தை தைரியமாய் சொன்னார்கள். அப். 4:31

*3*-

யூதர்களுக்கு தான் இரட்சிப்பு என்று நினைத்துக்கொண்டிருந்த காலத்தில், முதன்முறையாக யூதரல்லாத புறஜாதியினருக்கும் பரிசுத்த ஆவியானவர் தந்தருளப்பட்டபோது *பல பாஷைகளைப்* பேசினார்கள்.

*எதை பேசினார்கள்*?
தேவனைப் புகழ்ந்தார்கள். அப். 10:45

*4*-
எபேசுவிலே பவுல் சென்றபோது நடந்த சம்பவத்திலும், அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசி தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். அப். 19:6

*எதை பேசினார்கள்*?

தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். அப். 19:6


*B- கீழே விழுதலைக் குறித்த சம்பவங்கள்:*


1-
*தேவனுடைய மகிமையைக் கண்ட எசேக்கியேல் – முகங்குப்புற விழுந்தார்*.
எசே. 1:28 மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

எசே. 2:1-2 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன்.

உடனடியாக கர்த்தர் *எழுந்து காலூன்றி நிற்கச் சொல்கிறார். பிற்பாடு ஆவி அவர் உள்ளே சென்றது* என்பதைக் கவனிக்கவும்.

2-
*தரிசனத்தைக் கண்ட தானியேல் முகங்குப்புற விழுந்தார்.*


தானி. 8:15-17 தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் பொருளை அறிய வகைதேடுகையில், இதோ, மனுஷசாயலான ஒருவன் எனக்கு எதிரே நின்றான். … அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு *முகங்குப்புற விழுந்தேன்*;

தூதனோ, *எழுந்து காலூன்றி நில்* என்று சொல்கிறார்.

தானி. 8:18 அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக் கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் *காலூன்றி நிற்கும்படி* செய்து:

3-
*ஆபிரகாமின் பிறந்த நாள்* வாழ்த்தாக தேவன் அவருக்கு கட்டளையிட்டபோதும் நடந்த சம்பவத்தை காணவும்:

ஆதி. 17:1-3 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; *நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு*. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். *அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான்*. தேவன் அவனோடே பேசி:

தேவன் அவரை கீழே தள்ள இல்லை, மாறாக ஆபிரகாம் தேவனை வணங்கும்படிக்கு முகங்குப்புற விழுந்து வணங்கினார்.

முகங்குப்புற விழுந்த மற்ற அனைத்து நிகழ்வுகளையும் இங்கே காணலாம்:  
ஆதி. 17:17; யாத். 3:6; லேவி. 9:23-24; எண். 14:5, எண். 16:22, எண். 16:45; யோசுவா 5:14; நியா. 13:20; 1இரா. 18:39; எசே. 1:28, 3:23, 9:8; தானி. 8:17-18, 10:9; மத். 17:6;

4-
வெளிப்படுத்தல் புத்தகத்தில் வரும் கடைசி சம்பவத்திலும் நாம் காண்பது:
*தரிசனத்தில் யோவான் அப்போஸ்தலன் மனுஷகுமாரனைக் கண்டபோது செத்தவனைப்போல தரையிலே விழுந்தார்*. வெளி. 1:17

அப்பொழுதும், அவர் பயப்படாதே என்று தேற்றப்பட்டார் !!
"வெளி. 1:17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;”

எங்கேயும், எந்த இடத்திலேயும், ஆவி உட்புகுந்தவுடன் கீழே விழுந்ததாக வேதாகமத்தில் இல்லை. *மாறாக, எழும்பி நிற்க தான் செய்தனர் !!*

*வேதாகம நிகழ்வுகளின்படி*

பரிசுத்த ஆவியானவர் தந்தருளப்பட்ட போது:
எவரும் கீழே விழுந்து மயங்கி கிடக்கவோ,
ஐயோ அம்மா என்று கதறவோ,
உடம்பெல்லாம் எரிகிறது என்று கூக்குரல் இட்டுக்கொண்டு தரையில் உருளவோ,
பேசுகிறவருக்கும் அங்கு கூடி இருக்கும் எவருக்குமே புரியாத சப்தத்தில் ஊளையிடவோ, கனகனா வென்று, க்ஷீரக்க சந்திரமோரிக்கா என்றோ, ரீக்கா பீக்கா என்றோ அல்லது வேறு எவ்வித விநோத ஒளியையுமோ எவரும் எழுப்பவே இல்லை.

CDஐ தொட்டவுடன் கீழே விழுவதற்கும், போதகரின் கை பட்டதும் கீழே விழுவதற்கும், கையசைத்தவுடன் கீழே தள்ளப்பட்டு விழுவதற்கும் வேதாகம சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தத்தையும் வேதத்தில் காணமுடிவதில்லை !!

மோடிமஸ்தான் காலத்தில் இல்லாமல் உணர்ச்சி வசப்படுதலிலிருந்து தப்பி  வேதாகமத்திற்கு செவிக்கொடுக்கவேண்டியது அவசியம்.

இரட்சிப்பை தேடுகிறோம் என்ற தேடலில் அதளபாதாளத்தில் தள்ளப்பட்டுவிடக்கூடாது.
 
 *எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக