மகிழ்ச்சியும் கேலியும் ஒன்றல்ல
by : Eddy Joel Silsbee
சிட்சிக்கும் தேவனுடைய குமாரனும், நம்மை இரட்சித்தவருமான கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சிக்கும், கேலிக்கும் வித்தியாசம் தெரியாமல் சமுதாயம் மாறிவிட்டது என்ற அச்சம் உள்ளது.
கேலி செய்பவர்களைப் பாராட்டக்கூடிய அளவிற்கு தரம் தாழ்ந்த நிலை சமுதாயத்தில் உள்ளது !!
*சும்மா தமாஷ்* என்று மற்றவர்களை கிண்டலும், கேலியும் செய்வதை வேதாகமம் வன்மையாய் கண்டிக்கிறது.
1- இகழ்வோரை அவர் இகழுகிறார்; நீதி. 3:34
2- ... நீங்கள் பேதைமையை விரும்புவதும், ...நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும்... எதுவரைக்கும் இருக்கும்? நீதி. 1:22
3- ... நீ பரியாசக்காரனானால் *நீயே அதின் பயனை* அநுபவிப்பாய். நீதி. 9:12
4- மூடிவிட்டு அமைதிக் காக்காமல் “என் தகப்பன் நிர்வாணமாய் கிடந்தார்” என்று தன் தகப்பனுக்கு அவமரியாதையை வருவிக்கும்படியாய் அக்காரியத்தை வெளியே சொன்னதால் நோவாவின் மகன் காம் சபிக்கப்பட்டான் ஆதி. 9:20-27...
கிண்டலோ, கேலியோ செய்யும் போது, முதலாவது அது *ஆண்டவர் காதில் விழுகிறது என்பதை நாம் உணரவேண்டும்* ! எண். 12:2
பரியாசக்கார் கூடியிருக்கும் இடத்தில் அவர்களோடு சேர்ந்து *நாம் உட்காரவும்* அனுமதியில்லை !! சங். 1:1
மகிழ்ச்சியாயிருப்பதற்கும், மற்றவர்களை கிண்டல் அடித்து மகிழ்விப்பதற்கும் *எதிர்மறை* பலன் உண்டு. எரே. 6:28
ஒருவரை ஒருவர் கேலி செய்து அல்ல;
பிறரை மேன்மையாக பாவித்தே நம் கூடுகையானது மகிழ்ச்சியில் பொங்கட்டும். பிலி. 2:3
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக