#293 - *நெற்றியில் ஆண்கள்/பெண்கள் பொட்டு வைப்பது முறையானதா?*
*பதில்* :
இந்திய வரலாற்றைப் பார்க்கும்போது, இந்துக்கள் தங்கள் சாதியை வேறுபடுத்துவதற்காகவும் தாங்கள் *எந்த* தெய்வத்தை வணங்குகிறார்கள் என்பதை தெரிவிக்கும் படியாக கண் புருவங்களுக்கு இடையிலான அடையாள புள்ளி தான் பொட்டு என்பது. புனித காரியங்களை காணும் மூன்றாம் கண் என்று சொல்லி சமஸ்கிருதத்தில் பிந்தி என்றும் தமிழில் பொட்டு என்றும் பொருள்.
தற்கால பெண்கள் – தங்களின் ஆடைகளுடன் பொருந்தும்படி பல்வேறு வண்ணங்களில் ஒரு சிறிய புள்ளியாக அதை வைத்துக்கொள்கின்றனர்.
தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் படியாக:
1-கும்குமத்தினால் சிவப்பு புள்ளிகளாகவும்
2-வெள்ளைநிற செங்குத்து குறுகிய கோடுகளாகவும்
3-செங்குத்தாக நீண்ட கோடுகளாகவும்
4-கிடைமட்ட கோடுகளாகவும்
5-கிடைமட்ட இரட்டை அல்லது மூன்று கோடுகளாகவும்
படுக்கைவாட்டு கோடு போட்டால் (Horizontal line) – ஒரு தெய்வத்தையும்
செங்குத்து கோடு போட்டால் (Vertical Line) – ஒரு தெய்வத்தையும்
புள்ளி வைத்தால் ஒரு தெய்வத்தையும்
மேலும் எந்த கலரில் வைக்கிறார்களோ (கருப்பு சிவப்பு வெள்ள மஞ்சள் போன்றவை) அவைகள் அவரவர் குலம் கோத்திரம் என்று இதில் ஏராளமான பிரிவுகள் உள்ளது.
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை அணிந்திருக்கிறார்கள். கலா. 3:27
கிறிஸ்துவுடனேகூடச் நாம் சிலுவையிலறையப்பட்டிருக்கிறோம். இனி சுய அடையாளம் அல்ல... கிறிஸ்துவே நம்மில் வெளிப்படுகிறார். கலா. 2:20
ஆகவே நெற்றியில் எவ்வகையான குறியீட்டையும் போடகூடாது. (உபா. 18:9)
பேலியாளுக்கும் கிறிஸ்துவின் ஜனங்களுக்கும் சம்பந்தமேது ?? (2கொரி. 6:14-15)
ஸ்டைல் என்றோ கலாசாரம் என்றோ நாகரீகம் என்றோ எந்த கிறிஸ்தவனும் / கிறிஸ்தவளும் தங்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்பவர்கள் கிறிஸ்துவை அல்ல, மாறாக ஹிந்துக்களின் தெய்வங்களை ஜனங்களுக்கு முன்பாக தங்களை பிரதிபலிக்கிறார்கள்.
புரியாமல் இந்நாட்களில் செய்யும் பல காரியங்களில் இதுவும் ஃபேஷனாக மாறிவிட்டது.
எந்த காரணத்திற்காகவும் நெற்றியில் அடையாளத்தை நாகரிகமாக பயன்படுத்துகிறேன் என்றாலும், உலகம் அவர்களை இந்துவாகவே முதலில் அடையாளப்படுத்துகிறது.
ஆகவே, பொட்டு வைப்பதனால் கிறிஸ்தவராக அல்ல இந்துமதத்தை சார்ந்தவர் என்பதை உலகத்தாருக்கு அறிவிக்கிறார்கள்.
எல்லாவற்றிலும் கடவுளை மகிமைப்படுத்தும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளபட்டிருக்கிறதே !! கொலோ. 3:23-25
நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் என்று 1 கொரிந்தியர் 10:31ல் பார்க்கிறோம்.
கிறிஸ்தவ மார்க்கத்திற்குள் வரும் போது நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டும். ஞானஸ்நானம் எடுக்கும் போதும் ஒருவர் பொட்டு வைத்துக்கொள்ள ஆசைபட்டால் – இன்னும் சத்தியம் சரியாக அவருக்கு எடுத்துச் சொல்லவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +918144776229
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக