வியாழன், 31 அக்டோபர், 2019

#591 - புகை பிடிப்பது பாவம் என்று வேத வாக்கியத்தில் இல்லை ஆகையால் புகை பிடிக்கலாமா?

#591 - *புகை பிடிப்பது பாவம் என்று வேத வாக்கியத்தில் இல்லை ஆகையால் புகை பிடிக்கலாமா?*

*பதில்*
வியாதி வந்தபின் டாக்டரை தேடி ஒடி அது கெட்ட பழக்கம் என்று உணர்ந்து அதை  நிறுத்திக்கொள்ளும்படியான வாய்ப்புகள் கிடைப்பது போல - நியாயதீர்ப்பில் அப்படி  ஒரு வாய்ப்பு கொடுக்கப்படாமல் இடது பக்கம் நிற்க வைத்து (மத். 25:41) அப்படியே போக சொல்லிவிடுவார் என்பதை ஏற்க இவர்கள் மனம் மறுக்கிறது.  

புகை பிடிப்பது எவ்வளவு கொடியதென்று அதன் அட்டை பெட்டியிலேயே புகையிலையின் விளைவினை வண்ண படத்தோடு அச்சிட்டதோடு இல்லாமல் உடலுக்கு கெடுதல் என்று எழுதினாலும் - பார்த்தும் படித்தும் புரியாதவர்கள் தங்கள் சரீரத்தை கெடுத்துப் கொள்கிறார்கள்.

உங்கள் சரீரம் உங்களுடையது அல்ல !!  - 1கொரி. 6:19

அதை முதலாவது புரிந்து கொள்ள வேண்டும் – அந்த சரீரம் கிறிஸ்துவின் விலை மதிப்பிட முடியாத இரத்தத்தால் விலை கிரயமாக அவருக்கு சொந்தமாக வாங்கப்பட்டு விட்டது – 1கொரி. 6:20

உங்கள் சரீரமானது பரிசுத்த ஆவியானவர் வாழும் ஆலயமாக இருக்கிறது – 1 கொரி. 3:16.

அந்த ஆலயத்தை கெடுத்துப்போட்டால் – தேவன் அவனை கெடுப்பார் (அந்த ஆத்துமா அழியும்) – 1கொரி. 3:17

புகை பிடிப்பதினால் மது அருந்துவதினால் அல்லது வேறு எந்த தீய செய்கைக்கும் உடன் படும் போது அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள் – ரோ. 6:16

புகை பிடித்தல் தன்னை மாத்திரம் அல்ல மற்றவரையும் கெடுக்கிறது – 1கொரி. 10:24

கெட்ட பழக்கத்தை தொடருவதற்கு காரணத்தை தேடாமல் தேவனுக்கு பிரியமாய் முன்மாதிரியாக நடக்க வேண்டும்.

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம். 2கொரி. 7:1

தேவனுக்கு முன்பாக நடுங்குங்கள், அஞ்சியிருங்கள் என்ற வேத வசனத்தை (சங். 96:9, 33:8, எரே. 10:7, வெளி. 14:7, 15:4, எபி. 12:29)  பொருட்படுத்தாமல் தங்களுக்கு சாதகமானவற்றை கோர்த்து பற்றிக்கொண்டு புதிய ஏற்பாட்டு கட்டளைகளை உதாசீனப்படுத்தி அங்கீகரிக்கப்படாத முறையில் - தேவனுடைய தொழுகையை தனக்கு இஷ்டமாக நடத்திக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் - இந்த மாதிரியான அடிப்படைகளில் இருந்தே மாற்றம் வரவேண்டியது மிக அவசியமே.
 
 *எடி ஜோயல் சில்ஸ்பி*
 ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக