திங்கள், 23 ஜூன், 2025

#1212 - இறந்து போனவர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாமா?

 #1212 - *இறந்து போன பெற்றோர் செய்த வேண்டுதல்கள் நிறைவேறாமல் மரித்துவிட்டதால் நேர்த்தி கடன் என்று, கிறிஸ்தவ குடும்பங்களில் இன்றைக்கும் ஆடு கோழி பலியிட்டு  உடையையும் சேர்த்து இலவசமாக அதை  குஷ்டர்களுக்கோ வியாதியாஸ்தருக்கோ கொடுங்கள் என்று செய்யச் சொல்வது சரியா? நாம் இதற்கு உடன்படலாமா?*

*பதில்* : ஒரு தரம் பிறப்பதும் ஒரே தரம் மரிப்பதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது என்பது மாத்திரமல்ல, அவர்கள் மரணத்திற்கு பின்னர் நியாயத்தீர்ப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது வேதம். எபி. 9:27 
 
ஒருவரது உயிர் இவ்வுலகத்தை விட்டு பிறிந்தவுடள், அந்த உயிர் மீது தனக்கே எந்த அதிகாரமும் இல்லை. சரீரம், ஆவி, ஆத்துமா – தன் தன் இடத்திற்கு போய்விடும். பிர. 12:7, எபி. 9:27, சங். 89:48
 
மரித்தவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. பிர. 9:5
 
பாதாளத்தில் இருக்கும் ஐசுவரியவானுக்கு தான் பூமியில் வாழ்ந்திருந்த காலத்திலுள்ள அத்தனை நினைவுகளும் அவனை வாட்டி எடுத்தது. லூக்கா 16:27-28
 
என் மகனே, என்று பாசமாய் அழைத்த போதும், ஆபிரகாமே நினைத்தாலும், பாதாளத்தில் உள்ளவர்களுக்காய் எந்த நன்மையையும் செய்யமுடியாது. இவ்வுலகத்தில் ஒன்றை செய்து பாதாளத்திலுள்ளவர்களை பரதீசுக்குள் அனுப்பவும் முடியாது. போனது போனது தான்.. லூக். 16:25-26
 
இதைப் படித்தவுடனேயே பலருக்கு, இயேசு கிறிஸ்து ஏன் பாதாளத்தில் போய் பிரசங்கித்தார் என்றும், மரித்தவர்களுக்காய் ஏன் ஞானஸ்நானம் கொடுத்தனர் என்றும் கேள்வி எழும்பும். இரண்டிற்குமான சரியான புரிதலை நமது கேள்வி பதில் புத்தகத்திலுள்ள #415 மற்றும் #107ஐ வாசித்துப்பார்க்கவும்.
 
ஆகவே, நேர்த்திக்கடன் என்று ஒன்றை செய்வதால் இறந்தவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஒருவேளை, அவர்கள் இந்த காரியத்தை மனப்பூர்வமாய் செய்தால், செய்தவர்களுக்காவது நன்மை உண்டாக ஏதுவாகும். எபி. 6:10, மத். 10:42 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
  
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக