#1186 - *மோசே கானானுக்குள் பிரவேசிக்கமுடியவில்லை. ஆனால் மோசே குடும்பம் கானானுக்குள் பரவேசித்திருக்கிறார்களா?* அப்படியிருந்தால் ஆதாரமான வசனம் வேனும்.
*பதில்* : மோசேயின் குடும்பம் எகிப்திலிருந்து வெளியே வரவில்லை. மோசேயும் ஜனங்களும் எகிப்திலிருந்து வனாந்திரத்திற்கு வந்துள்ளதை கேள்விப்பட்ட மோசேயின் மாமனார், தனது மகளையும் (மோசேயின் மனைவி) பேரப்பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு மீதியானிலிருந்து போய் மோசேயை வனாந்திரத்தில் சந்தித்தார்கள். யாத். 18:1-3
“யாத்திராகமம் 18:1-3 தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது, மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும், அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான்”
அதன் பின்னர் மோசேயின் குமாரர் (கெர்சோம் மற்றும் எலியேசர் – 1நாளா. 23:15) மோசேயுடனேயே 40வருடங்களும் வனாந்திரத்திலேயே இருந்து கானானுக்குள் பிரவேசித்திார்களா அல்லது மீதியானுக்குத் திரும்பினார்களா என்பதை குறிப்பான வசனத்தை வேத்தில் நான் காணமுடியவில்லை.
யாத்திராகமம் 4:20ம் வசனத்தில் மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான் என்ற வசனத்திற்கும் யாத். 18:2ம் வசனத்திற்கும் இடையில் ஏன் அல்லது எப்போது சிப்போராளும் பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பி வந்தனர் என்ற தகவல் இல்லை. ஆனால், மோசேயினால் மீதியானுக்கு *திருப்பி அனுப்பப்பட்ட* என்ற வார்த்தையை நாம் யாத். 18:2ல் அறியமுடிகிறது.
மேலும், குறிப்பாக எகிப்திலிருந்து வெளியே வந்தவர்களில் யோசுவாவும் காலேபும் (2பேர் மாத்திரம்) என்பதில் வேதம் தெளிவகாக வலியுறுத்தியுள்ளது. எண். 32:11-13.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
வியாழன், 23 மார்ச், 2023
#1186 - மோசே கானானுக்குள் பிரவேசிக்கமுடியவில்லை. ஆனால் மோசே குடும்பம் கானானுக்குள் பரவேசித்திருக்கிறார்களா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக