#1185 - *வேதத்தில் கோகு மாகோகு என்றால் என்ன?* அதன் அர்த்தம்? வெளிப்படுத்தல் 20:8ல் வரும் கோகையும் மாகோகையும் குறித்து விளக்கவும்.
*பதில்* : வெளிப்படுத்தல் 20:8ன் விளக்கத்தைக் காண்பதற்கு முன்னர் எசேக்கியேல் 38-39ம் அதிகாரத்தை நாம் புரிந்துக்கொள்வது அவசியம்.
வெளிப்படுத்தல் 20:8ல் வரும் இந்த தீர்க்கதரிசனம் ப்ரீமில்லினியலிஸ்டுகளால் அவர்களின் இறுதிக்கால கோட்பாடுகளை ஆதரிப்பதற்காக அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. அவர்கள் எசேக்கியேலின் சூழலை அதன் காலத்து நாடுகளுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களுடன் புறக்கணிக்கிறார்கள்.
தீர்க்கதரிசனம் மாகோக் தேசத்தில் வசிக்கும் கோக் என்ற நபருக்கு எதிராக உரைக்கப்பட்டவையாகும். எசேக்கியேல் 38: 2-9
கோக் ஒரு இளவரசன் அல்லது ஆட்சியாளர். வேத வல்லுநர் கோக் என்பது பார்வோனைப் போன்ற ஒரு பொறுப்பு பதவி என்றும் அது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர் அல்ல என்றும் குறிப்பிடுகின்றனர்.
யூத மதத்தின் பேரழிவுகரமான வீழ்ச்சிக்குப் பிறகு, ஏகாதிபத்திய துன்புறுத்துபவர்களின் மீது பரிசுத்தவான்களின் வெற்றிக்குப் பிறகு, சபைக்கு புறமதவாதத்துடன் மீண்டும் ஒரு புதிய போராட்டம் ஏற்பட்டது. இது சாத்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் அடையாளமாக ஆன்மீக மோதலாக இருந்தது.
யூத மதம் திருச்சபையின் பாதையில் இருந்து அகற்றப்பட்டு, ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்படுவதை நிறுத்தியது. மத்தேயு 24:31 இல் இயேசுவால் முன்னறிவிக்கப்பட்ட மற்றும் வெளிப்படுத்துதல் 11:15 இல் யோவான் உரைத்தப்படி, கிறிஸ்தவத்தின் விரிவாக்கத்திற்கான வழி திறக்கப்பட்டது.
ஆனால் எதிர்ப்பு இல்லாமல் இல்லை, எஞ்சியிருந்த எதிரி மதவெறி. இந்தப் போராட்டத்தில் சாத்தானின் செயல்பாடானது துன்புறுத்தல் அல்ல, பூமியின் நான்கு மூலைகளிலும் இருக்கும் தேசங்களை ஏமாற்றப் புறப்படும் ஆன்மீகம் மற்றும் கோட்பாடு ரீதியிலானது. (வெளி. 20:8.) அந்த அறிவிப்பு மத்தேயு 24:31 இன் நற்செய்தியின் தூதர்களுக்கு எதிரானதாக இருந்தது.
நாம் காணும் இப்பகுதி புறமதத்துடனான போரை விவரிக்கிறது. எனவே கோக் மற்றும் மாகோக் (ஒரு பெயரின் கலவை) புறஜாதிகளின் புராண ஆட்சியாளர் (Mythical ruler) மற்றும் தலைப்பானது எசே. 38:1-23 அத்தியாயத்தில் எசேக்கியா தீர்க்கனால் இதே போன்ற குறியீட்டு குறிப்பில் பயன்படுத்தப்பட்டது. இது கோகும் மாகோக்கும் இஸ்ரவேலுக்கு (சபைக்கு) புறமதத்தினராலான அச்சுறுத்தலை தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளது.
துன்புறுத்தும் பேரரசர்களில் மிருகம் என்று உருவகப்படுத்தப்பட்டது ரோமானியப் பேரரசை அடையாளப்படுத்தும் அடையாளக்குறி என்னும் போல், சபைக்கு எதிராக வெளி. 20:8ம் வசனத்தின் "போர்" கோக் மற்றும் மாகோக் ஆன்மீக சக்திகளின் மீதான அடக்குமுறையின் ஆளுமைக்கான அடையாளம். அதில் புறஜாதி படைகளான கோக் மற்றும் மாகோக் கடலின் மணலாகக் குறிப்பிடப்பட்டது. இது மோதலின் விகிதாச்சாரத்தையும் சபைக்கான சவாலையும் குறிக்கிறது.
இங்கு "பிரியமான நகரம்" என்று குறிப்பிடுவது எருசலேம் நகரத்தை அல்ல; புதிய இந்த பிரியமான நகரம் என்பது சபை/ புதிய எருசலேம்.
சபைக்கு விரோதமாகவும் அனைத்து விரோதங்களாலும் சூழப்பட்ட, உலகத்தின் உருவ வழிபாடுகளுக்கு மத்தியில், புறவினவாதத்தால் சூழப்பட்டிருந்தது.
ரோமர்களின் முதல் அத்தியாயமும், கொரிந்தியர், எபேசியர் மற்றும் கொலோசிய நிருபங்களும் சபைக்கு வரும் இந்த பெரிய ஆபத்தை உறுதிப்படுத்துகின்றன.
2 கொரிந்தியர் 6:14-18 இல் கொரிந்தியரிலுள்ள சபைக்கு பவுல் குறிப்பாக அறிவுறுத்தியது புறஜாதிகளின் செல்வாக்கின் இந்த அச்சுறுத்தலைப் பற்றியது.
2 கொரிந்தியர் 4:2-4 இல் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியானது "இந்த உலகத்தின் கடவுளால்" ஏற்படுத்தப்பட்ட இருளில் உள்ளவர்கள் விசுவாசித்தபோது அவ்விருளை அகற்றியது என்று அப்போஸ்தலன் அறிவித்தார்.
ஏகாதிபத்திய மிருகமோ அல்லது புறஜாதியான மாகோகோ தேவனுடைய வல்லமையைத் தாங்க முடியவில்லை. ரோமர் 16:20 ல் பவுல் கூறிய அதே விஷயங்களைக் குறிப்பிடுவதுதான்: "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார்"
சாத்தான் விடுவிக்கப்பட்டு, பூமியின் நான்கு மூலைகளிலும் (கோக் மற்றும் மாகோக்) தேசங்களை ஏமாற்றினாலும், இவை அனைத்தும் பரிசுத்தவான்களின் முகாமையும் பிரியமான நகரத்தையும் சுற்றி வளைத்தாலும், கடவுள் தம் மக்களை விடுவிப்பார்.
இது எக்காலத்திலும் தேவனுடைய தீர்க்கதரிசிகளின் செய்தியாகவே இருந்து வந்தது (எசேக். 38:17-18).
வெளி. 20ல் விவரிக்கப்பட்டுள்ள போர், நவீன நாடுகளுக்கு இடையேயான ஒரு பௌதிகப் போர் அல்ல. இது ஒரு தார்மீக மற்றும் ஆன்மீகப் போர். கோக் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த உலகின் சக்திகளான நாத்திகம், மனிதநேயம், கம்யூனிசம், பொருள்முதல்வாதம், பொய் மதம், அரசாங்கங்கள் மற்றும் வணிகங்களில் ஊழல், ஒழுக்கக்கேடு, குடும்பத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் உலக விஷயங்களை கைவிடுதல் (ரோ. 1:18; 1 பேதுரு. 4:3) போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
*References*: Charles Blair மற்றும் 1966ல் எழுதப்பட்ட Foy. E. Wallace. Jr அவர்களின் விரிவுரையிலிருந்து எடுக்கப்பட்ட தகவலை நான் மொழி பெயர்த்துள்ளேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக