சனி, 14 ஜனவரி, 2023

கிறிஸ்தவனுக்கு ஏது பொங்கல்

*கிறிஸ்தவனுக்கு ஏது பொங்கல்*

by : Eddy Joel Silsbee

 

வானத்தையும் பூமியையும், தாவரங்கள், மாடுகள் என்று உலகத்தில் உள்ள அனைத்தையும் தன் வார்த்தையால் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சதுர்நாலியா என்ற அலங்கோலமான பண்டிகையானது, இன்று கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலகையே விக்கிரகத்திற்கும் தேவபக்திக்கும் சத்தியத்திற்கும் ஜனங்களை எப்படி வேதத்திலிருந்து பிரித்து செல்கிறது போல;

 

குளிர் காலம் முடிந்து விளைச்சலை கண்ட விவசாயிகள், சூரியனை வணங்கி நன்றி சொல்லும் விக்கிரகாராதனை பண்டிகைக்கு அவர்கள் வைத்த பெயர் *பொங்கல் என்பதை` தமிழர் திருநாள்* என்று பெயர் மாற்றியமைத்தன் பொருள் அறியாமல் அதில் பங்கெடுப்பது கிறிஸ்தவர்கள் விக்கிரகாராதனைக்கு ஒப்பீடு என்பதை மறந்து போகக்கூடாது. 2யோ.1:11

 

*பொங்கலின் வரலாறு*:

இந்துக்களால், இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு பண்டிகை.

 

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவ மாதம் தை மாதம் ஆகும்.

 

அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைப்பார்கள்.

 

நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மையும், நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மையும் நடக்கும்.

 

ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும்.

 

அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக இந்துக்கள் வைப்பார்கள்.

 

செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் அவர்கள் மரபு.

 

பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல்.

 

சிருஷ்டிப்பாகிய சூரியனையும் விளைச்சளையும் மிருகங்களையும் விட்டு சிருஷ்டிகரை தொழுதுக் கொள்ள வேண்டும் என்று, கிறிஸ்தவர்கள் எடுத்துச்சொல்ல வேண்டும். ரோ. 1:25

 

அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள். ரோ. 1:23

 

ஊரோடு ஒத்துப்போகவேண்டுமென்று, வேதாகமத்தை தூக்கிக்கொண்டு பிரசங்கம் செய்யும் ஊழியர்களும், தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக சப்பைக்கட்டுவது அவர்களுடைய செய்கைகளுக்கும் பங்குள்ளவர்கள்.. 2யோ.1:11

 

2தீமோத்தேயு 3:1-5ம் வசனங்கள் அவர்களை தோலுரிக்கிறது.

 

கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல் நல்வழிப்படுத்துங்கள்.. எபே. 5:11. இல்லையேல் அப்படிப்பட்டவர்களே பொங்கல் ஆவார்கள் !!

 

உலகம் அனைத்தையும் படைத்த தேவனே நமக்கு சகாயர்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/dKl-tIxYH1c

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 


 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக