#1170 - *பெயர் மாற்றப்பட்ட பின்பும் யாக்கோபு என்றே ஏன் அழைக்கப்பட்டார்?* ஐயா... வேதாகமத்தில் ஆபிராமுக்கு தேவன் ஆபிரகாம் என பேர் வைத்த பிறகு திரும்ப ஆபிராம் என அழைக்கவில்லை. அதே போல் சாராய்க்கு தேவன் சாராள் என பேர் வைத்த பிறகு திரும்ப சாராய் என அழைக்கவும் இல்லை சாராய் என ஒரு இடத்தில் கூட பரிசுத்த ஆவியானவர் பதிவும் செய்யவுமில்லை. ஆனால், யாக்கோபுக்கு தேவன் தான் இஸ்ரவேல் (ஆதி. 32:28) என பேர் வைத்தார். அப்படியிருக்கும் போது பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி இஸ்ரவேல் என அழைக்க வேண்டிய தேவன் ஏன் யாக்கோபு என அழைக்கிறார்.
உதா:- இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே....
(ஏசாயா 43:1) என்று பழைய பேரையே சொல்லி திரும்ப திரும்ப அழைக்க காரணம் என்ன? இது பல நாள் கேள்வி இன்று தான் கேட்க வேண்டும் தோனுச்சு. விளக்கம் தாருங்கள் ஐயா.... நன்றி.
*பதில்* : ஆதியாகமம் (32:28; 35:10) புத்தகத்தில், "ஏமாற்றுபவர்" அல்லது "வஞ்சகர்" என்று பொருள்படும் யாக்கோபின் பெயரை தேவன் இஸ்ரவேல் என்று மாற்றினார். யாக்கோபு என்றால் ”தேவனுடன் போராடி ஜெயித்தவர்".
மேலும் "இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்" என்றும் (ஆதி. 35:10) தேவன் சொல்லும் அளவிற்குச் சென்றார்.
இருப்பினும், ஏவப்பட்ட தீர்க்கதரிசிகளால் யாக்கோபின் பெயர் பெரும்பாலும் எப்போதும் பயன்படுத்தப்பட்டது. யாக்கோபு என்ற பெயர் மாற்றப்பட்டது என்ற குறிப்பு வசனத்திற்கு தொடர்ந்தும் கூட அதே பெயரில் தான் காண்கிறோம். (ஆதி. 35:14-15).
பல ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்துக்குச் செல்லும்படி தேவன் இவருக்கு அறிவுறுத்தியபோதும், அவர் அவரை "யாக்கோபு" என்று குறிப்பிடுகிறார்.
ஆதி. 46:1-2 இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான். அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
யாக்கோபு இனி அந்தப் பெயரால் அழைக்கப்பட மாட்டார் என்ற கூற்றுடன் இந்தப் பயன்பாடு எவ்வாறு ஒத்துப்போகிறது?
முதலாவதாக, யாக்கோபு என்ற பெயரை இஸ்ரவேல் என்று மாற்றியதைத் தொடர்ந்து உடனடியாகப் பலமுறை மோசே பயன்படுத்தியபோது (ஆதியாகமம் 32:29 உட்பட), எழுத்தாளனாகிய மோசே, யாக்கோபின் பெயர் மாற்றம் குறித்து விளக்கமளிக்கிறார். அதாவது, "உன் பெயர் இனி யாக்கோபு என்று அழைக்கப்படாது" (32:28) என்ற தேவனின் கூற்று, முற்பிதாவாகிய யாக்கோபுவை மீண்டும் ஒருபோதும் "யாக்கோபு" என்று அழைக்க மாட்டார் என்பதை உண்மையில் அர்த்தப்படுத்தவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
இயேசு சீமோனுக்கு "கேபா" (யோவான் 1:42) என்ற புதிய பெயரைக் கொடுத்த பிறகு, இயேசு அவரை "சீமோன்" என்று அடிக்கடி அழைத்தார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
அப்படியென்றால் ஆபிரகாமின் பேரன் இனி "யாக்கோபு" என்று அழைக்கப்படமாட்டான் என்ற தேவனின் கூற்றை எப்படி நாம் புரிந்துகொள்வது? குறைந்தது இரண்டு சாத்தியங்களை காண்கிறேன்:
*முதலாவதாக*, யாக்கோபு என்ற *பெயரின் அர்த்தத்தால்* பரவலாக இனி அடையாளம் காணப்பட மாட்டார் என்று கர்த்தர் அர்த்தப்படுத்தியிருக்கலாம். தன் சகோதரனின் ஆசீர்வாதத்தைத் திருடுவதற்காக (ஆதியாகமம் 27:1-40) தன் தந்தையிடம் பொய் சொன்ன வஞ்சகமான, ஏமாற்றுக்கார சகோதரனாக இருப்பதற்குப் பதிலாக, அவர் என்றென்றும் "தேவனுடன் போராடி மேற்கொண்டவர்" (ஆதி. 32:28) என்று அறியப்படுவார். "யாக்கோபு" இப்போது "இஸ்ரவேல்" (அவரது பிறந்த பெயர் இன்னும் பயன்படுத்தப்பட்டது).
*இரண்டாவதாக* பொருத்தமானதாக நான் கருதுவது என்னவென்றால், யாக்கோபு இனி ஏமாற்றுக்காரன் என்ற அர்த்தத்துடனான யாக்கோபு என்ற பெயரால் அறியப்படாமல், யாக்கோபு என்ற உச்சரிப்பு பெயரால் மட்டுமே அறியப்படுவார் என்று கர்த்தர் அர்த்தப்படுத்தியிருக்கவேண்டும்.
எரேமியா 16:14-15ம் வசனங்களில் “இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல், இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்”
என்று எரேமியா தீர்க்கதரிசனம் கூறியதைக் கவனியுங்கள்.
எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை வெளியே கொண்டுவந்த தெய்வீக விடுதலையைப் பற்றி யூதர்கள் இனி ஒருபோதும் பேச மாட்டார்கள் என்பது அர்த்தமல்ல பாபிலோனிய சிறையிலிருந்து அவர்கள் (எதிர்காலம்) வெளியேறுவதைப் பற்றியும் பேசுவார்கள் என்று தீர்க்கதரிசி எரேமியா கூறினார்.
இது போன்ற மற்றொரு உதாரணத்தையும் நாம் கவனிக்கமுடிகிறது.
"ஞானஸ்நானம் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை" (1கொரிந்தியர் 1:17) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதும்போது, யாரையும் ஞானஸ்நானம் கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காக அவர் எந்த நேரத்தையும் செலவிடக் கூடாது என்றோ பவுல் அர்த்தப்படுத்தவில்லை.
ஆனால் அவருடைய சிறப்பு நோக்கமே கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதாகும் என்பதே.
யாக்கோபுவின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்ட பிறகும், தேவனும் மற்றவர்களும் ஏன் யாக்கோபு என்ற பெயரையேப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது நமக்குத் துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், தர்க்கரீதியான சாத்தியக்கூறுகளே இவை.
(வேதாகம ஆசிரியர் எரிக் லியோன்ஸின் பதிவிலிருந்து சில கருத்துக்களை நான் இங்கு உபயோகப்படுத்தியுள்ளேன்)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக