புதன், 25 ஜனவரி, 2023

#1171 - காணிக்கை தொகையை எப்படி நிர்ணயம் செய்வது? கிறிஸ்துவின் சபையில் தசமபாகம் இல்லையே

#1171 - *காணிக்கை தொகையை எப்படி நிர்ணயம் செய்வது? கிறிஸ்துவின் சபையில் தசமபாகம் இல்லையே*

*பதில்* : வாய்க்கு ருசியாக தினமும் டீ கடையில் @ ₹8 வீதம் கொடுத்து காலையிலும் மாலையிலும் டீ குடிக்க திராணியுள்ளவர்கள், தினம் ₹20ரூபாய் செலவு செய்தாலும், ஆட்டோவிற்கும் நொறுக்குத் தீணிக்கும் தினம் 100 ரூபாய் செலவு செய்தாலும்; வாரத்தின் முதல் நாளில் தேவனுடைய தொழுகையில் ஏதோ பிச்சை போடுவது போல 10 ரூபாய் நோட்டு தாளை எவருக்கும் தெரியாமல் பெட்டியில் திணித்துவிட்டால் தேவன் பார்க்கமாட்டாரோ? 

தசமபாகம் என்பது கிறிஸ்துவின் சபையில் என்றல்ல. அந்த முறையானது கிறிஸ்தவத்திலேயே கிடையாது.

தசமபாகம் என்பது இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரமானம். அதை அவர்கள் லேவியருக்கு கொடுக்கவேண்டும்.  எபி. 7:5

தசமபாகம் என்பது பணத்தில் செலுத்தப்படுவது அல்ல. அது நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலுமே கொடுக்கப்பட கட்டளையிடப்பட்டது (லேவி 27:30-33)

எவரும் இங்கு இஸ்ரவேலரும் கிடையாது, பெற்றுக்கொள்வதற்கு எவரும் லேவியரும் கிடையாது.

கிறிஸ்தவர்கள், மோசேயின் கட்டளைக்கு அல்ல கிறிஸ்துவின் கட்டளைபடி நடக்க வேண்டும்.

10% தசமபாகம் இல்லை உதாரத்துவமாக மனமுவந்து மனதில் நியமித்து காணிக்கையை கொடுக்க வேண்டும் என்றதும், தேவனையே லாவகமாக ஏமாற்றுதாக நினைத்துக்கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் சபையார் இக்காலங்களில் பெருகிவிட்டது பரிதாபமானது.

ஊழியர்கள் தங்கள் சபையினருக்கு காணிக்கையின் மகத்துவத்தை எடுத்துச் சொல்வது அவசியம்.

சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான் (2கொரி. 9:6) என்பதை ஊழியர்கள் தங்கள் சபையினருக்கு வலியுறுத்தி சொல்லும் போது உலக ஆசீர்வாதத்தினையும் கூட்டி பெற்றுக்கொள்வார்கள்.

விதைக்கிறவனுக்கு வேண்டிய விதையை தேவன் அளித்து, அதை பெருகப்பண்ணுகிறார். 2கொரி. 9:10

ஐயோ, காணிக்கை நேரம் வந்துவிட்டதே, காசு (coin) போட்டால் சப்தம் வந்துவிடுமே என்று கையை மடக்கி சுருட்டி எவருக்கும் தெரியாமல் குறைந்தபட்சம் 5 அல்லது 10 ரூபாய் நோட்டை காணிக்கை பையில்/பெட்டியில் திணித்து விட்டு திருப்தியாய் கடக்கும் ஜனங்களது வாழ்க்கை எவ்வாறு ஆசீர்வதிக்கப்படும்? அவர்களுக்கு தேவையான 5 அல்லது 10 ரூபாய் அளவிற்கே பெருகச்செய்துவிடுவார் என்று வசனம் சொல்கிறது!

தாராளமாய் கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் அவ்வாறே திரும்ப கிடைக்கும். லூக்கா 6:38ம் வசனத்தின் இரண்டாம் பாகம் சிலிர்க்க செய்கிறது. வாக்கியத்தை கவனியுங்கள்:
“லூக்கா 6:38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.”

நாம் உதாரத்துவமாய் கொடுக்கும் போது, அதை தேவன் கட்டாயம் திரும்பத் தருகிறார். எபி. 6:10, நீதி. 19:17

இதை ருசிபார்த்துக்கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.

காணிக்கை கொடுப்பது தொழுகையின் ஒரு பகுதி. எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களுக்கு வழங்கப்பட்ட உதவியானது தேவனை மகிமைப்படுத்தியது என்று 2கொரி. 9:10-15ல் வாசிக்கிறோம்.

காணிக்கையானது தேவனுக்கு சுகந்த வாசனையான பலி என்று பிலிப்பியர் 4:15-18ம் வசனங்களில் காண்கிறோம்.

கூடுதலாக கொடுத்தால் தேவனிடத்திலிருந்து பலமடங்காக பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி கொடுப்பதல்ல. சொந்த பணத்திலிருந்து மனரம்மியமாக உதாரத்துவமாக சந்தோஷமாக நிறைவாக கொடுக்கவேண்டும் என்று வேதம் கற்பிக்கிறது. 2கொரி. 8:12

தங்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாக உதாரத்துவமாய் காணிக்கை கொடுக்கவேண்டும். அப். 11:29

வாய்க்கு ருசியாக தினமும் டீ கடையில் @ ₹8 வீதம் கொடுத்து காலையிலும் மாலையிலும் டீ குடிக்க திராணியுள்ளவர்கள், தினம் ₹20ரூபாய் செலவு செய்தாலும், ஆட்டோவிற்கும் நொறுக்குத் தீணிக்கும் தினம் 100 ரூபாய் செலவு செய்தாலும்; வாரத்தின் முதல் நாளில் தேவனுடைய தொழுகையில் ஏதோ பிச்சை போடுவது போல 10 ரூபாய் நோட்டு தாளை எவருக்கும் தெரியாமல் பெட்டியில் திணித்துவிட்டால் தேவன் பார்க்கமாட்டாரோ? தரித்திரமும் ஏழ்மையும் எப்படி அகலும்? விதைக்க நினைக்கும் விதையை தேவன் எவ்வாறு பெருகச்செய்வார்?

உற்சாகமாய் கொடுப்பவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். தாராளமாய் கொடுப்பவர்கள் அதன் பலனை நிச்சயம் பெற்றுக்கொள்கிறார்கள். பிர. 11:1
தாராள குணம் உள்ளவர்களது வாழ்வு செழிக்கும். கொடுப்பதற்கு தாராளமாய் முற்படுவோம். அதற்கு தேவையானதையும் தேவன் பெருக செய்வார். நீதி. 11:25
வந்த பின்னர் கொடுக்கலாம் என்றால் உள்ளது எப்போதும் போதாது. ஏற்கனவே நம் கையில் உள்ளதை தேவனே கொடுத்தார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது. நாம் கொடுக்கும்போது, அது திரும்பக் கிடைக்கும் - லூக்கா 6:38
நாம் விதைக்கும்போது, அறுவடை செய்வோம். 2கொரி. 9:6-10. இது ஒரு சுழற்சி என்பதை மறந்து போகவேண்டாம். நாம் கொடுப்பது தேவனை மகிமைப்படுத்துகிறது. 2கொரி. 9:10

பழைய ஏற்பாட்டில் யூதர்களிடம் 10சதவீதம் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்ற தேவனுடைய கட்டளையானது நமக்கு எதை கற்றுத்தருகிறது? குறைந்தபட்சம் 10சதவீதமாவது நாம் கொடுக்கவேண்டாமோ? இஸ்ரவேலர்களுடைய வாழ்க்கை முறையில் 10சதவீதமாவது கொடுக்க வேண்டும் என்று தேவன் அவர்களிடம் எதிர்பார்த்தாரே?

நாம் அதைவிட அதிகம் கொடுக்கவேண்டாமோ?


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக