செவ்வாய், 27 டிசம்பர், 2022

#1165 - எனது நண்பர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். அவருக்கு நான் இயேசுவை குறித்து சொல்லும் போது, இயேசு கிறிஸ்து வாழ்ந்ததற்கான அடையாளங்களையும் சில நிகழ்வுகளை பற்றி கூறும்போது அவர் ராமர் பாலம் இன்று வரை எங்களுக்கு அடையாளமாக உள்ளது என்றார். எனவே இதை பற்றி விளக்கம் அளிக்க முடியுமா?

#1165 - *எனது நண்பர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். அவருக்கு நான் இயேசுவை குறித்து சொல்லும் போது, இயேசு கிறிஸ்து வாழ்ந்ததற்கான அடையாளங்களையும் சில நிகழ்வுகளை பற்றி கூறும்போது அவர் ராமர் பாலம் இன்று வரை எங்களுக்கு அடையாளமாக உள்ளது என்றார். எனவே இதை பற்றி விளக்கம் அளிக்க முடியுமா?*

*பதில்* : மற்ற மதத்தினரின் நம்பிக்கையை அவமாக்க நமக்கு உரிமையில்லை. சபரிமலைக்கு போவதைக் குறித்தோ ராமர் பாலத்தைக் குறித்தோ நாம் நேரம் செலவிடுவதைக் காட்டிலும் நம்மையும் பரலோகத்திற்கு கொண்டு செல்ல வல்லவரும், அறிந்தவரும், மரணத்தையே வெற்றி சிறந்தவருமான இயேசு கிறிஸ்துவைக் குறித்து கீழே எழுதுகிறேன்:

1-மனிதனாக பிறந்தவர்களில் இன்று வரை இயேசுவின் மூலமாக அன்றி இயேசுவைத் தவிர வேறு எவரும் மரணத்தினின்று உயிர்த்தெழவில்லை. இயேசு உயிர்த்தெழுந்தது சரித்திரம்.

2-ஏழை, பணக்காரர், உயர்தவர், தாழ்ந்தவர், மேல் ஜாதி அல்லது கீழ் ஜாதி என்ற எந்த பாரபட்சமும் பாராமல் அனைவரையும் நேசித்து அங்கீகரித்தவர் இயேசு. மத். 9:11

3-இரத்தப்போக்கு இருந்தாலும், தீட்டுள்ளவர்களானாலும், சமுதாயத்திலிருந்து தள்ளப்பட்டவர்களானாலும், ஆண்களும் பெண்களும் இயேசுவிடம் தைரியமாக அருகில் செல்லமுடியும். லூக்கா 8:43-48, மத். 8:2

4-குளிர் காலம் மாத்திரம் என்றோ, குறிப்பிட்ட மாதம் என்றோ இல்லாமல் எந்த காலத்திலும் தேவனைத் தொழுதுகொள்ளலாம். அப். 2:42-46

5-தேவன் எவ்விடத்திலும் இருப்பதால், அவரை குறிப்பிட்ட இடத்திற்கு பயணம் சென்று தரிசிக்கவேண்டிய அவசியமில்லாதபடிக்கு; நான் விமானத்தில் ஏறினாலும், கப்பலில் பயணித்தாலும், சுரங்கத்தினுள் சென்றாலும் எங்கு இருந்தாலும் அவரவர் இருக்கும் இடங்களிலிருந்தே தொழுதுக்கொள்ள முடிகிறது. யோ. 4:21, சங். 139:8-11

6-என் கடவுள் என் சரீரத்தை பாராமல், எவ்வளவு அழுக்கானவனாயிருந்தாலும், குளிக்காவிட்டாலும், அன்புள்ள இருதயத்தை மாத்திரமே பார்த்து என் இருதயத்தை சுத்தப்படுத்தி அவர் என்னை பரிசுத்தம்பண்ணி அவருக்கு ஏற்றவனாக என்னை மாற்றுகிறார். யாக். 2:1-5, லேவி. 20:8

7-எனது பாவத்தை நானே கழுவிக்கொள்ள வாய்ப்பேயில்லாதபடியால், தேவனுடைய வசனத்தின்படி கீழ்படியும் போது, என் தேவனே எனது பாவத்தை மன்னித்து கழுவி என்னை பரிசுத்தம் பண்ணி பரலோக பாதையில் நிலைநிறுத்துகிறார். மாற்கு 16:16

8-பரலோகம் எங்கிருக்கிறதென்று அவருக்கு மாத்திரமே தெரியும். அவர் அங்கிருந்து இந்த பூமியில் மனிதனாய் வந்தார். மீண்டும் பரலோகத்திற்கு ஏறி போனார். மரித்தபின்னர் உயிரோடு எழும்பியதை 500க்கும் மேற்பட்ட ஜனங்கள் கண்டார்கள். அவர் மீண்டும் வந்து அவரை சார்ந்து அவரது வசனத்தின்படி வாழ்ந்தவர்களை பரலோகம் கொண்டு செல்கிறார். அப். 1:9, 1கொரி. 15:6, யோ. 14:3

இப்படியாக இன்னும் ஏராளமான குறிப்புகளை என்னால் சொல்லமுடியும்.

ஆகவே, மற்ற மதத்தினரது கொள்கையை நாம் புண்படுத்தாமல் அல்லது யார் சரி என்று நிரூபிக்க முயலாமல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை பரலோகம் கொண்டு செல்ல வல்லவர் என்பதை நாம் அறிவதே அவசியம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக