செவ்வாய், 27 டிசம்பர், 2022

#1164 - இயேசுவிற்கு பதிலாக சிலுவையை சுமந்த சிரேனே ஊரானாகிய சீமோனை குறித்து அதிக தகவல் இருந்தால் பதிவிடவும் ஐயா.

#1164 - *இயேசுவிற்கு பதிலாக சிலுவையை சுமந்த சிரேனே ஊரானாகிய சீமோனை குறித்து அதிக தகவல் இருந்தால் பதிவிடவும் ஐயா.*

*பதில்* : படங்களிலும் கதைகளிலும் நாம் பார்த்து பழகியதால், உண்மையைக் காட்டிலும் சுயகற்பனா சக்தியில் வெளியிட்ட படங்களே நமது இதயத்தில் பதிந்து விடுகிறது.

இரா முழுதும் அடிபட்டு காயப்பட்டு பெலனின்றி சிலுவையை இயேசுவினால் சுமக்க முடியாமல் சிறிது நேரம் சிரேனே ஊரானாகிய சீமோன் சுமந்தார் என்பதைக்காட்டிலும் சிலுவையை சுமந்து இழுத்து செல்ல இயேசு சிரமப்பட்ட பொழுது பிற்பகுதியில் தரையில் பட்டு இழுத்துக்கொண்டு வந்த சிலுவைபகுதியை சிரேனே ஊரானாகிய சீமோனின் மீது வைத்து இருவரும் சேர்ந்து இழுக்க வைத்திருக்கவேண்டும் !!

லூக்கா இந்த குறிப்பை கவனமாக எழுதியிருப்பதை வாசிக்கலாம்.

லூக்கா 23:26 அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை *அவர்பின்னே* சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.

யோவான் கூறுகிறார் 19:17ல் இயேசு "தம் சிலுவையைச் சுமந்துகொண்டு" புறப்பட்டார்.

லூக்கா சொல்கிறார் 23:26 இயேசுவுக்குப் பிறகு சீமோன் சிலுவையைச் சுமக்கும்படி அவன் மீது வைத்தார்கள்.

இந்தக் கணக்குகளில் எந்த முரண்பாடும் இல்லை. சிலுவையில் அறையப்பட்டவர்களின் வழக்கமான தண்டனையின் ஒரு பகுதியாக இருந்தது.

மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு தண்டனை பெற்றவர்களே தங்கள் சிலுவையைச் சுமக்க வேண்டும்.

அதன்படி, அது முதலில் இயேசுவின் மீது வைக்கப்பட்டது, அதைத் தாங்கிக்கொண்டு யோவான் சொன்னபடியே அவர் புறப்பட்டார். இருப்பினும், பலவீனமானவர், துன்பத்தாலும் சோர்வுற்றதால், பெரும் சுமையினால் விழுந்திருக்கலாம்.

மேலும் லூக்கா சொல்வது போல், "இயேசுவிற்குப் பிறகு" சிலுவையின் "ஒரு முனையை" அவர் சுமக்கும்படி அவர்கள் சீமோனை வலியுறுத்தினர்.

சிரேனே ஊரானாகிய சீமோனைக் குறித்து மத். 27:32; மாற்கு 15:21; லூக்கா 23:26 வசனங்களை தவிர வேறு எந்த தகவலும் வேதாகமத்தில் இல்லை.

சிரேனே ஊர் லிபியாவின் ஒரு நகரம். அப். 2:10

அங்கு ஜெப ஆலயம் இருந்துள்ளது. அப். 6:9

லூகியும் அந்த பகுதியை சார்ந்தவர். அப். 13:1

ஆப்பிரிக்காவில், எகிப்துக்கு மேற்கே இருந்தது. அங்கே பல யூதர்கள் இருந்தார்கள், மற்றவர்களைப் போலவே அவர்களும் எருசலேமுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

Website : kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக