*வாழ்வின் நோக்கம் என்ன?*
by : Eddy Joel Silsbee
துதிக்கு பாத்திரரான நம் பரம பிதாவிற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக.
தேவனுடைய நாமத்திற்கு மகிமையாகவே மனிதன் வாழவேண்டும் என்று படைக்கப்பட்டு, அவன் பூமியில் பலுகி பெருக வேண்டும் என்றார் தேவன். அது மனிதனுக்கு தேவன் அளித்த கிருபை.
அந்த நோக்கத்தை மறந்து;
“தன்” வாழ்வு சுகமாய் இருக்க வேண்டுமென்று சதா சுயநலனிலேயே அக்கறையாய் இருப்பது தேவனுடைய சித்தத்திற்கு முரணானது.
சில வசனங்கள் கீழே :
ஏசா. 43:21 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
ஏசா. 60:21 உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.
1கொரி. 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
நம் பேச்சும், நடக்கையும், செயல்களும், எண்ணங்களும் சொந்த லாபத்தை விட தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதாய் இருக்கிறதா என்று யோசித்து செயல்படுவோம்.
அதை தான் மத்.16:33லும் காண்கிறோம். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை நாம் தேடினால், அவர் நமது தேவைகளைப் பார்த்துக்கொள்வார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக