செவ்வாய், 29 மார்ச், 2022

நாயகரை அவமதிப்பதா?

*நாயகரை அவமதிப்பதா?*

by : Eddy Joel Silsbee

 

கிருபையுள்ள தேவனின் நாமத்திற்கே சகல மகிமையும் உண்டாவதாக.

 

*முழு இருதயத்தோடும்* நாம் தேவனை தொழுது கொள்ள வேண்டும்.

 

சிந்தனையை எங்கோ வைத்துக்கொண்டு,

மற்றவரோடு இராகத்துடன் கடமைக்கென்று சேர்ந்து பாடிவிட்டு,

ஜெபத்தை கவனிக்காமல்,

ஆமென் கூட போட தோன்றாமல்,

யோசனையை வேறு எங்கோ வைத்துவிட்டு...

ஆண்டவரே என் தேவைகளை பூர்த்திசெய்யும்” என்று கூக்குரலிடும் போது அவரிடத்திலிருந்து பதில் உடனே வரும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

 

இந்தப் பாடலின் துவக்கத்தையும் முடிவையும் கவனியுங்கள் : “முழு இருதயதோடும் உம்மை துதிப்பேன், தேவர்களுக்கு முன்பாக உம்மை கீர்த்தனம் பண்ணுவேன், உம்முடைய உண்மையின் நிமித்தமும், உமது கிருபையின் நிமித்தமும் உமது நாமத்தை துதிப்பேன் என்று சங்கீதக்காரன் கீழ்படிந்த போது (சங். 138:1-2) “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று சொல்ல முடிந்தது..!! (சங். 138:8)

 

தொழுகையில் கூடும் போது;

-தேவனைத் தொழுதுக்கொள்ள வந்திருக்கிறோம் என்ற மரியாதை இருதயத்தில் இருக்கவேண்டும்.

-வந்ததும் அருகாமையிலுள்ளவரிடம் நலம் விசாரிக்கவோ, பேச்சுக்கொடுத்து அரட்டையடிக்காமல் தொழுகை துவங்கும் வரை அமைதலாய் இருக்கவேண்டும்.

-அண்டத்தையே படைத்தவர் நேரில் அங்கு ஆஜர் என்பதால் சரியான நேரத்திற்குள் கட்டாயம் வந்து சேர வேண்டும். தாமதாய் வருவது அவரை அவமானப்படுத்துவதாகும்.

-வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் பெற்றவர் நமது மத்தியில் இருக்கிறார் என்பதால் எவருக்கும் எந்த கவனச்சிதறலும் ஏற்படாதவாறு, அனைவருக்கும் மரியாதை செய்யும்படிக்கு  தொலைபேசியை அனைத்துவிடவேண்டும்.

-ஆடாமலும் குதிக்காமலும் பயத்தோடும் ஒழுங்கோடும் அவரைத் தொழுதுக்கொள்ளவேண்டும்.

-அறியாமல் சிறுபிள்ளைகள் தொனதொனாவென்று அருகாமையிலுள்ளவரிடம் பேசினால் பெரியவர்கள் அவர்களுக்கு அறிவுரை சொல்லி அமைதிப்படுத்தவேண்டும்.

-ஜெபமும், பாடலும், காணிக்கையும், பந்தியும், பிரசங்கமும் *தேவனுடைய தொழுகை* என்பதால் இடையில் எழுந்து போய் மற்ற அவசர வேலையை பார்க்காமல் ஆரம்ப முதல் கடைசி வரை பங்கெடுக்க வேண்டும்.

 

அரை மணிநேரத்தை வீட்டுக் கடிகாரத்தில் கூட்டி வைத்துக்கொண்டாலும் கீழ்படிதல் இருதயத்தில் இல்லையென்றால் வாழ்க்கை சீர்படாது.

 

குழந்தை, மனைவி, கணவன், விருந்தாளி, நண்பர், சமையல், தூக்கம், குளியல் என்று ஆயிரம் காரணங்களை சொல்லாமல் 1மணி நேரத்திற்கு முன்பதாகவே ரயில் வண்டிக்கும் விமானத்திற்கும் போகமுடிகிறது.

 

ஆனால் தொழுகைக்கு மாத்திரம் துவக்கத்தில் வராமல் ஆடி அசைந்து தாமதமாக வருவதும், முக்கிய வேலை என்று இடையில் வெளியேறுவதைக் குறித்து தேவனே குறிப்பாக நம்மிடத்தில் அவரது செய்கையின் மூலம் விசாரிக்க ஆரம்பித்தால் நமது நிலைமை படுமோசமாகிவிடும். அப்பொழுது வாரத்திற்கு இரண்டு மணிநேரமல்ல… சதா அங்கேயே இருக்கவேண்டியதாகும்!

 

தேவனுக்கென்று வாரத்தில் 2மணிநேரம் முழுமையாய் ஒதுக்கமுடியாத அளவிற்கு அவரைவிட பெரிய அதிகாரியாகி விட்டோமோ?

 

வானத்தையும் பூமியையும் தனது வார்த்தைகளாலேயே படைத்த உன்னதமானவருக்கு பயப்படும் பயமும் நடுக்கமும் எங்கே போனது?

 

இடையில் வெளியேறுவதும் தாமதாய் தொழுகைக்கு வருவதும் தொழுகையின் நாயகரை அவமானப்படுத்தும் செயல்!

 

இவ்வசனங்களை வேதத்திலிருந்து எடுத்து வாசித்து புரிந்துக்கொண்டு செயல்படுத்தவும்: எபி. 12:28-29, 25; சங். 2:11; 89:7; 95:3,8; 97:1; 99:1; 119:120; 1பேதுரு 1:17; வெளி. 15:4.

 

நமது சவுகரியத்தை விட்டு தேவனுக்கு மரியாதையை செலுத்துவோம்.

 

வாழ்க்கையில் சகலமும் சீர்படும்.

 

நம்முடைய தேவைகளை அவர் பார்த்துக்கொள்வார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/Plpe66p_yt8

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக