வெள்ளி, 11 டிசம்பர், 2020

#1045 - ஒரு ஆண் பெண்ணாக மாறுவது சரியா? தவறா? தவறு என்றால் ஏன் தவறு? ஏன் மாறக்கூடாது?

#1045 - *ஒரு ஆண் பெண்ணாக மாறுவது சரியா? தவறா?* தவறு என்றால் ஏன் தவறு? ஏன் மாறக்கூடாது? மாறினால் என்ன தவறு? மாறினால் கடவுள் பார்வையில் எப்படிப்பட்டது? கடவுள் அதற்கு தண்டனை தருவாரா? ஆண் பெண்ணாக  மாற வேண்டும் என்கிற உணர்ச்சி அதிகமாக உள்ளது? என்ன செய்வது? வேதத்தில் தவறு என்று தேவன் சொல்லி இருக்கிறாரா? வேதம் இதைப்பற்றி என்ன சொல்லுகிறது? மாற விரும்புவது ஒரு கிறித்தவ தேவப்பிள்ளை சர்ஜரி பண்ணப்போகிறார்.

*பதில்* :
உங்களது கேள்வி, இந்நாட்களில் அதிகம் பேருக்கு தோன்றுகிறது என்பதால் முன்னுரிமை கொடுத்து உடனடியாக எழுத நான் தூண்டப்படுகிறேன்.

சபையில், ஆண்கள் மத்தியில் பெண்கள் பிரசங்கம் செய்வதென்பது அயோக்கியத்தனம் என்றும், அவர்களுக்கு அநுமதியில்லை என்றும் இப்படி கடுஞ்சொற்களால் எழுதப்பட்டிருந்தும், எக்காலத்திலும் ஸோத்ரம் ஸோத்ரம் என்று முணங்கிக்கொண்டிருக்கும் காளான் ரெவரெண்டுகளின் எவருடைய மூளையிலும் உறைக்காதபோது, நீங்கள் கேட்கும் இந்த கேள்விக்கு மிகுந்த அர்த்தம் உள்ளது என்பதை உணருகிறேன்.

கவர்ச்சியும், ஈர்ப்பும், இலச்சையும், பிரபல்யமும், முகதாட்சண்யமும் எதிர்பார்த்து இந்நாட்களில் ஜனங்கள் தங்களின் எந்த நிலையையும் மாற்றிக்கொள்ள தயாராக இருப்பது வேதனை.

கிறிஸ்தவனாகிவிட்டால், எந்த பாரபட்சமும் பாராமல், ஜாதி வித்தியாசம் இல்லாமல் சமமாக அனைவரும் பழகுவார்கள் என்ற எண்ணத்துடன் பலர் கிறிஸ்தவனாக உருவெடுப்பது அதைவிட கொடுமை.

தவறான, வேதம் அறியாத அட்டூழியக்காரர்களால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இக்காலத்தில் சுய லாபத்திற்கென்றும், தன் வயிற்றுப்பிழைப்பிற்கென்றும், ஊழியத்தையே குடும்பத்தொழிலாக செய்துக்கொண்டிருப்பவர்களால் உலகம் நிறைந்திருப்பதைக் கண்கூடாக காணமுடிகிறது.
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். சங்.127:3

தேவனே, தன் விருப்பப்படி ஒவ்வொருவரையும் வணைக்கிறார். 1கொரி.12:18

முக வடிவமோ, மூக்கு வளைவோ, நீளமோ, குட்டையோ கருப்போ, மாநிறமோ, மூளை வளர்ச்சி குன்றியோ எதுவாயினும், அது தேவனுடைய கரங்களில் இருந்து பெற்ற ஒரிஜினல் என்பதை நாம் முதலாவது அறியவேண்டும். ஆதி. 30:2, 33:5, 41:52, 48:4, 1சாமு. 1:20, 27, ஏசா. 8:18, ரூத் 4:13, 1நாள. 28:5, எபி. 2:13.

தமிழாக்கத்தில், “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது” என்றிருந்தாலும், மூல பாஷையான எபிரேயத்தில் “புருஷனாக தன்னை பாவிக்கும் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது என்றும், ஸ்திரீகளைப்போல தன்னைப்பாவிக்கும் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது என்ற அர்த்தத்தில்” எழுதப்பட்டுள்ளது. அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் என்பதை மிகத்தெளிவாக வேதாகமத்தில் காணமுடியும். உபா. 22:5

நீங்கள் குறிப்பிடும் நபர், தன் பாலினத்தை மாற்றிக்கொண்டாலும், அவருடைய ஒரிஜினாலிட்டியான டி.என்.ஏ சான்றுகள் ஒருபோதும் மாறாது. ஒரு மனிதராக உண்மையான சுயத்தை மறைத்து அல்லது மாற்றுவதென்பது வேஷம். இதுபோன்ற செயலை தேவன் வெறுக்கிறார் என்று வேதம் உபாகமம் 22:5ல் தெளிவாகக் காண்கிறோம்.

புருஷனுக்கு தலை கிறிஸ்து என்றும்; ஸ்திரீக்கு தலை புருஷன் என்றும் வேதாகமம் குறிக்கிறது. 1கொரி. 11:3

எவருடைய பாலினத்தையும் நிர்ணயித்தவர் தேவன். தன் பாலினத்தை மாற்றிக்கொள்வதால் எதை சாதிக்கிறார்? தன்னை படைத்த தேவன் தவறு செய்துவிட்டார் ஆகவே நான் அதை திருத்திக்கொள்கிறேன் என்கிறாரோ? தேவன் நீதிபரராயிற்றே. … மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ? யோபு 34:17

இந்த கேள்வியின் கதாநாயகன் கூறுவது என்னவென்றால், தேவன் அவருக்குக் கொடுத்ததைப் போல வாழ்க்கையை வாழ திருப்தியடையவில்லை. மாற்றிக்கொண்டால் மேன்மையாக இருக்கும் என்று நினைக்கிறார். ஏதாவது மாற்றப்பட்டால் மட்டுமே மகிழ்ச்சியைப் பெற முடியும் என்று நினைத்தால், அதை ஒருபோதும் பெறமுடியாது என்பதை அவர் உணரவேண்டும்.

பிரசங்கி 11ம் அதிகாரத்தின் 7-11 வசனங்கள் தான் ஞாபகம் வருகிறது.
வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே. மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே. வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக