#1002(4) - இயேசுவை குற்றவாளியாக மன்னனிடம் நிறுத்தும் போது, முதலில் 24 சவுக்கடிகள் கொடுக்க சொல்கிறார். ஆனால் அதை மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து இயேசுவை சிலுவையில் அறைய சொல்கின்றனர். மக்களின் கோரிக்கை ஏற்றே தண்டனை வழங்கப்பட்டது. அதே மக்கள் இயேசு சிலுவையில் அறையப்படும் போது அழுததாக சொல்வது யதார்த்தமாக இல்லையே...?
*பதில்* - இயேசுவை சிலுவையில் அறைந்தது அனைத்து மக்களும் அல்ல... யூத மதகுருக்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ளும்படி இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்தார்கள். யோ. 11:41
ஆனால் நியாயபிரமாணத்தின்படி பிரதான ஆசாரியரே பாவ நிவாரண பலியை தேவனுக்கு ஏறெடுக்கவேண்டும். அந்த முறையை தேவன் இந்த சம்பவத்தின் மூலம் நிறைவேற்றினார் !!
கிறிஸ்துவானவர் உங்களுடைய / என்னுடைய பாவத்திற்கான பலியை அன்றே ஏற்றுக்கொண்டார். ஆகவே, அவரை ஏற்றுக்கொண்டு அவர் கட்டளைக்கு கீழ்படிந்து பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெறும் போது நம்முடைய பாவங்கள் கடவுளுடைய சந்நிதானத்தில் மன்னிக்கப்படுகிறது. அப். 2:38; 22:16
தனக்காய் யாரும் அழவேண்டாம் என்று இயேசு கிறிஸ்து சொன்னார். லூக்கா 23:28. இருந்தபோதும் அவருக்காக அநேகர் அழுதார்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (incl. Govt. Registration)
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக