திங்கள், 28 மார்ச், 2022

#1002(5)- ரோம் நாட்டில் பெரும் தவறு செய்பவர்கள் எல்லோருமே சிலுவையில் தான் அறையப்படுகிறார்கள். இயேசுவின் மரணத்திற்கு பரிதாபம் ஏற்படுத்தி ஓட்டு வாங்க, மன்னிக்கவும் மக்கள் மனதை மாற்ற நினைப்பதன் நோக்கம்...?

#1002(5)- அந்த நாட்டில் பெரும் தவறு செய்பவர்கள் எல்லோருமே சிலுவையில் தான் அறையப்படுகிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்படும் போது இன்னும் 2 குற்றவாளிகளுக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டது. இயேசு மட்டுமே சிலுவையில் அறையப்பட்டது போல், பரிதாபம் ஏற்படுத்தி ஓட்டு வாங்க, மன்னிக்கவும் மக்கள் மனதை மாற்ற நினைப்பதன் நோக்கம்...?

*பதில்* - 3 பேர் அன்று சிலுவையில் அறையப்பட்டார்கள். இயேசு - குற்றமற்றவர் என்பதை அந்த தேசத்து அதிபதியே பிரகடனப்படுத்தி விடுதலை செய்தார். லூக் 23:4, 14-16

ஆனால் யூத குருமார்கள் அவரை சிலுவையில் அறையும் என்று ஜனங்களை ஏவிவிட்டு தங்கள் கசப்பை தீர்த்துக்கொண்டார்கள். லூக்கா 23:21

இயேசு சிலுவையில் மரித்தது - நம்முடைய அனைத்து ஜனங்களில் பாவத்திற்காக… ஒரே தரம் ஏறெடுக்கப்ட்ட பாவநிவாரண பலியானார். எபி 10:10

ஆகவே தான் இப்பொழுது பாவ நிவிர்த்திக்கென்று யாரும் பலி செலுத்துவதில்லை.

மற்ற 2பேரும் தாங்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை நிறைவேற்றப்பட்டது. லூக் 23:40-41

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (incl. Govt. Registration)
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA
----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக