#1002(3) - *சாத்தானின் தூண்டுதலால் தான் ஆதாமும், ஏவாளும் அந்த கனியை சாப்பிட்டு அவர்களுக்கு வெட்கம், மானம், ஆடை போன்ற மனித இயல்புகள் வந்ததாக சொல்கிறீர்கள். அப்படியென்றால் உங்கள் ஆண்டவர் வெட்கம், மானம், ஆடை இல்லாத மனிதரை தானே படைக்க விரும்பினார். அப்புறம் நீங்கள் ஏன் ஆடை அணிகிறீர்கள்? ஆடை அணிவது தான் சரி என்றால் நீங்கள் சாத்தானாக கருதுபவர் தானே உண்மையான கடவுள்...?*
*பதில்* - பூமிக்குள் பாவம் வந்த பின்னர் தான், முதல் குழந்தையான காயீன் பிறந்தான். அனைத்து பிள்ளைகளும் அந்த மாம்சத்தில் தான் பிறக்கிறது, பிறக்கிறோம். ஆகவே தான் அந்த மாமிசம் ஆயுட் காலம் குறைவுள்ளது. மரிக்கிறது. மண்ணுக்கு திரும்புகிறது.
மண்ணுக்கு திரும்பும் மாம்சத்தில் இருக்கும் காலம் வரை ஆடை அவசியம் என்பதை தேவன் உணர்த்தினார்.
அவர் தன் சொந்த கரங்களால் தோல் உடை அணிவித்தார். ஆதி. 3:21
இயேசு கிறிஸ்துவின் நாட்களில் பிசாசு பிடித்தவர்கள் அம்மணமாக சுற்றிதிரிந்தனர். மாற்கு 5:15, லூக்கா 8:35
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக