*அதோனாய்*
by : Eddy Joel Silsbee
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தேவனுடைய தன்மையின் அடிப்படையில் அவர் அழைக்கப்படும் பெயர்களை பார்த்து வருகிறோம்.
இன்று கவனிக்கும் வார்த்தை *அதோனாய்*
இதற்கொப்பான தமிழ் வார்த்தை/அர்த்தம் : *ஆண்டவர் / எஜமானன்*
“அதோனாய்” என்கிற எபிரேய வார்த்தையை மொழி பெயர்த்ததால் தமிழ் வேதாகமத்தில் இந்த வார்த்தையைக் காண இயலாது.
பழைய ஏற்பாட்டில் ஏறத்தாழ 434 முறை பார்க்க முடிகிறது. அதுவும் எசேக்கியல் புஸ்தகத்தில் மாத்திரம் 200 முறை வருகிறது !
வேதாகமத்தில் முதல் முறையாக ஆதி. 15:2ல் காணமுடிகிறது.
அதோனாய் என்பது யெகோவா அல்லது யாவே என்ற வார்த்தைகளுக்கு இணையான வாய்மொழி. அதோனாய் என்பது பன்மை; ஒருமை அதோன்.
அதோனாய் என்ற வார்த்தை பன்மையான தேவனைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஒருமை அதோன் பயன்படுத்தப்படும்போது, அது பொதுவாக ஒரு ஆளுமையான (ஆண்டவர்) மனிதனைக் குறிக்கிறது. ஆண்களைக் குறிக்க அதோன் 215 முறை வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெகு சில இடங்களில் (யாத். 34:23), குறிப்பாக சங்கீதங்களில், அதோன் என்ற வார்த்தையானது ஒருமை தேவனைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சில வசன குறிப்புகள் : ஆதி 15:2, 18:3, 20:4; சங் 35:23
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம்மனைவரோடும் இருப்பதாக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/jWLAB0zQ4sg
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக