வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

#768 - இவர் என்னுடைய நேசக்குமாரன் இவரில் பிரியமாயிருக்கிரேன் இது யாருடைய சத்தம்

#768 - *இவர் என்னுடைய நேசக்குமாரன் இவரில் பிரியமாயிருக்கிரேன் இது யாருடைய சத்தம்?*  என்னை அனுப்பின பிதா தாமே எனனைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருக்காலும்அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. யோவான் 5:37

*பதில்*
இந்த கடினமான பகுதியில் பல்வேறு வழிகளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் முக்கிய வடிவமைப்பு தெளிவாகத் தெரிகிறது - யூதர்கள் அவர் மேசியா என்பதற்கான ஆதாரங்களை நம்பாததற்காக அவரைக் கண்டிப்பது.

இதைச் சொல்வதன் நோக்கம் :
யூதர்கள் தேவனுடைய சாட்சியத்தை கேட்கத் தகுதியற்றவர்கள் என்று கூறுகிறார்.

தேவன் தனது தெய்வீக பணிக்கு போதுமான ஆதாரங்களை அளித்ததாக அவர் உறுதிப்படுத்தினார்.

ஆனால் அவர்களோ அதை புறக்கணித்தனர். இயேசு கிறிஸ்து யூதர்களை குறித்து நிதானிக்கும் முதல் விஷயம் என்னவென்றால், தேவனுடைய சத்தத்தை அவர்கள் கேட்கவில்லை. அதாவது “கேளுங்கள்” என்ற வார்த்தை “கீழ்ப்படியுங்கள்” அல்லது புரிந்து கொள்ளவில்லை என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது.

அக்கூஊ என்ற கிரேக்க வார்த்தைக்கு – சப்தம்/புரிந்து கொள்ளுதல்/அறிக்கையிடுதல் என்று பொருள்.

தேவனின் சத்தம் என்பது அவருடைய கட்டளைகளையோ அல்லது அவருடைய அறிவிப்புகளையோ குறிக்கிறது.

இயேசு கிறிஸ்து - யூதர்களின் "குணாதிசயம்" தான் தேவனுடைய சத்தத்திற்கும் கட்டளைக்கும் செவிசாய்க்கவில்லை என்று கூறினார்.

இது அவர்களின் பொதுவான குணாதிசயமாக இருந்ததால், மேசியாவைப் பற்றிய அவருடைய சாட்சியத்தை அவர்கள் இப்போது புறக்கணித்திருப்பது ஆச்சரியமல்ல. தேவனுடைய சப்தம் உண்மையில் மலையில் கேட்கப்பட்டது - உபா. 4:12. ஆனால் கீழ்படிந்தார்களோ?

இன்றும் நம் கரங்களில் சொந்த மொழியில் தேவ சப்தம் கொடுக்கப்பட்டிருந்தும் – பயமும் நடுக்கமும் கீழ்படிதலும் இல்லாமல் ஆடிக்கொண்டும் உளறிக்கொண்டும் நைட் க்ளப்போல ஆராதனை என்ற பெயரில் கூடி பொழுதை போக்கும் குணம் இருக்கும் இருக்கத்தானே செய்கிறது !!!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee


*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக