*யேகோவா-ராஹ்*
by : Eddy Joel Silsbee
நமது மேய்ப்பராகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தன்மையின் அடிப்படையில் எபிரேயத்தில் அழைக்கப்படும் தேவனுடைய நாமங்களை பார்த்து வருகிறோம்.
இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.
இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா ராஹ்*
(சொல் வழக்கத்தில் இவ்வார்த்தை மருவிய தொனி -> யேகோவா ரூவா/ யேகோவா ரோஹி)
ஆங்கிலத்தில் : yehhovaw' raw-aw' /Jehovah Rohi / Jehovah Ro'eh.
தமிழ் வார்த்தை/அர்த்தம் : மேய்ப்பராகிய என் தேவன்
மொழி பெயர்த்ததால் இந்த எபிரேய வார்த்தை அப்படியே தமிழ் வேதாகமத்தில் காண முடிவதில்லை.
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்று சங்கீதம் 23ல் நாம் இவ்வார்த்தையை காண்கிறோம்.
வேத குறிப்புகள் : சங். 23; 80:1; 95:7; ஏசா. 40:11; எரே. 31:10; எசே. 34:12; 23; மத். 25:32; யோ. 10:11-27; எபி. 13:20-21; 1பேதுரு 2:25; 5:4
யேகோவா என்னும் எபிரேய வார்த்தைக்கு "இருப்பவர்" அல்லது "கர்த்தர் / இறைவன்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ராஹ் என்பதன் அர்த்தம் எபிரேய மொழியில் "மேய்ப்பவர்".
மேய்ப்பன் என்பது தன் மந்தையை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்பவன் (எசே. 34:11-15).
இந்த வார்த்தையின் நீட்டிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு, ரியா', "நண்பன்" அல்லது "தோழன்" ஆகும். கடவுளுக்கும் தம் மக்களுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை இது குறிக்கிறது.
இரண்டு வார்த்தைகளும் இணைந்தால் - யேகோவா ராஹ் - "இறைவன் என் நண்பன்" என்று மொழிபெயர்க்கலாம்.
எப்போது எது தேவை என்று அறிந்து நம்மை நேர்த்தியாய் நடத்திக்கொண்டு இருக்கும் நம் ஆண்டவரின் மந்தையிலே இருப்போம்.
சரியான மேய்ச்சல் ஏற்றவேளையில் கிடைக்கும். (சங். 23)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA
இப்பதிவின் YouTube லிங்க்:
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக