*பிறப்பதற்கு முன்பும் இயேசு கடவுள்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 20 July
by : Eddy Joel Silsbee
ஆதியும் அந்தமுமான தேவாதி தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
நாங்க கும்பிடற சாமி உங்க இயேசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருக்கும்போது, 2000 வருஷங்களுக்கு முன்னர் வந்த இயேசுவை எப்படி கடவுள்னு சொல்லமுடியும்னு ஒருவர் வாதிட்டார்.
பல கிறிஸ்தவர்களிடம் இந்த கேள்விக்கு திணறல் உண்டு !!
இயேசு கிறிஸ்துவைக்குறித்து வேதம் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்:
கொலோ. 1:18 ... அவரே *ஆதியும்* மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
வெளி. 3:14 ... உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு *ஆதியுமாயிருக்கிற* ஆமென் என்பவர் ..
யோ. 1:1-3 *ஆதியிலே வார்த்தை இருந்தது*, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
கொலோ. 1:15-17 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், *சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்*. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. *அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர்*, எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
மாம்சத்தில் இந்த உலகத்தில் பிறந்த போது கொடுக்கப்பட்ட பெயர் இயேசு. மத். 1:21, 1யோ. 4:2-3, யோ. 1:14, 2யோ. 1:7, 1தீமோ. 3:16
மனுஷனாகிய யோசேப்பினுடைய வித்தின் மூலமாக பிறக்காமல் தேவ ஆவியானவரின் பெலத்தால் மாத்திரமே பிறந்ததால் அவர் தேவக் குமாரன் என்னப்படுகிறார். மத். 1:20, லூக்கா 1:35
இயேசு ஆதியில் இருந்தே நம் எல்லாருக்கும் தேவன். ரோ. 9:5, ஏசா. 9:6-7, 1யோ. 5:20, எபி. 1:8-13, 1தீமோ. 3:16, அப். 20:28
ரோமர் 9:5 .. மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
இயேசு இந்த உலகத்தில் பிறந்த நாள் முதல் அல்ல; உலகம் உருவாவதற்கு முன்னமே அவர் கடவுள்.
தவறு செய்து மனிதன் கடவுளிடமிருந்து விடுபட்டுப் போனதால், தம்முடன் மீண்டும் இணைக்கும்படிக்கு இந்த பூமிக்கு தன் பிதாவால் அனுப்பப்பட்டவர். யோ. 3:16
இவரின் உதவியில்லாமல் எவரும் பரலோகம் போகமுடியாது.. அப். 4:12
சிறியக் கதவை கொண்டுள்ள பரலோகத்தின் வாசலை சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அனைவரது கண்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பரமேறிப் போன இயேசுவை நாம் பின்தொடரத் தவறினால் வழி மாறிவிடுவோம். யோ. 14:6, மத். 7:14
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக