சனி, 11 டிசம்பர், 2021

ஏமாற்றாமல் கீழ்படிந்தால் ஆசீர்வாதம் தானாய் வரும்

*ஏமாற்றாமல் கீழ்படிந்தால் ஆசீர்வாதம் தானாய் வரும்*

By : Eddy Joel Silsbee

 

எந்த சூழ்நிலையிலும் நம்மை வழிநடத்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

*தான் சொல்ல விரும்பியதை* கண்களை மூடிக்கொண்டு,

"ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்" என்று சொல்லிக்கொண்டே பிரசங்க மேடையில் வந்து எனக்கு ஆவியானவர், சொல்லச் சொன்னதை சொல்கிறேன் என்று அவிழ்த்து விட்டு போகும் மேடை பேச்சாளர்களால் சபைகள் அல்ல சங்கங்களே உருவாகிறது...

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன நோக்கத்தை,

தங்களுக்கு சாதகமாக்கக்கூடாது !!

 

வசனத்தை நன்கு கவனியுங்கள்...

அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்” லூக்கா 12:11-12

 

இயேசு கிறிஸ்து அப்போஸ்தலருக்கு சொல்லிக்கொடுத்ததை, ”அவர்களுக்கு” அதாவது அப்போஸ்தலருக்கு பரிசுத்த ஆவியானவர் *நினைப்பூட்டுவார்* என்று யோவான் 14:26ல் பார்க்கிறோம். அதனிமித்தமே, எதையெல்லாம் நாம் கடைபிடிக்கும்படி இயேசுவானவர் அப்போஸ்தலருக்கு கற்பித்தாரோ அவையெல்லாவற்றையும் நாம் அறிந்து கீழ்படிய ஏதுவாக அப்போஸ்தலர்கள் நமக்கு எழுதிவைத்தனர்.

 

நீங்களும் நானும் சபையினருக்கு முன்பதாக போகும்போது, கர்த்தருடைய வசனத்தை பிரசங்கிப்பதற்கு நம்மை நன்கு தயார் படுத்திகொள்ளும்படி, சத்தியத்தை சத்தியமாய் போதிக்கும்படியாக, ஜெபித்து, வேதம் வாசித்து, குறிப்புகளை எடுத்து நன்கு தயார் படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.

 

பவுல் தீமோத்தேயுவிற்கு சொல்லும் புத்திமதியை கவனியுங்கள் !!

 

வாசிக்கிறதிலும் (1) புத்திசொல்லுகிறதிலும் (2) உபதேசிக்கிறதிலும் (3) ஜாக்கிரதையாயிரு.  1 தீமோ. 4:13, எபே. 3:3-5

 

வாசிக்கவேண்டும் பின்னரே புத்திசொல்ல துவங்கவேண்டும் !!

 

ஊர் உலகம் சுற்றின கதையோ,

தான் ஜெபித்ததால் நடந்தது என்ற விளம்பரமோ,

சொந்த கற்பனை கதைகளையோ,

சுய அநுபவத்தையோ அல்ல ”வேதத்தையே” விவரிக்க வேண்டும்.  மல்கியா 2:7

 

சாமுவேல் பிறந்தபோதுள்ள சூழ்நிலையை இக்கால பிரசங்க மேடை பேச்சாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது ! 1சாமு. 3:1

 

சத்தியத்தை முறையாக போதிக்க வேண்டுமெனில்;

சத்தியத்தை முதலாவது படிக்க வேண்டும்.

 

இல்லையெனில் வார்த்தையைக் கூட முறையாய் உச்சரிக்க அறியாமல் ஆலேலூயா ஸோத்திரம் ப்ரைஸ் ”லா” என்று அசைப்போட்டுக் கொண்டேயிருந்தால் தன் வேஷம் ஒரு நாள் வெளுத்தே போகும் !

 

கேட்பவர்களை மாத்திரமல்ல பேசுபவர்களையும் வேத வசனம் பதம் பார்க்கிறது !!! சங். 149:8, எபி. 4:12, வெளி. 1:16; 2:12

 

வசனத்திற்கு செவிசாய்ப்போம் தேவனுக்கு முன்பாக நடுங்கி கீழ்படிவோம். அவர் நம்மை ஆசீர்வதிக்காமல் யாரை ஆசீர்வதிப்பார்? 1யோ. 5:5

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/L8xNzkPsgh4

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக