ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

#1110 - சிலர் நமக்கு மரணமே இல்லை என்று சொல்லுகிறார்கள். விளக்கவும்

*#1110 - சிலர் நமக்கு மரணமே இல்லை என்று சொல்லுகிறார்கள். விளக்கவும்*

தேவனை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்பதை (யோ.  3:16) நாம் விசுவாசிக்கிறோம். ஆனால், இதை சிலர் நமக்கு மரணமே இல்லை ஏன் என்றால் நித்திய ஜீவனை தந்தருளினார் என்று சொல்லுகிறார்கள். நாம் யோபு புஸ்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது போல நாம் வாலவயது புத்திரரை போலாவோம் என்கிறார்கள். இதை விளக்கவும்.

*பதில்* : உங்கள் கேள்வியை நான் இரண்டு விதமாக புரிந்துக்கொள்ளவேண்டியுள்ளது.

என் முதல் அனுமானம் : நித்திய ஜீவனைப் பெற்றதால் சரீர மரணமேயில்லை என்றோ அல்லது

என் இரண்டாம் அனுமானம் : நித்திய ஜீவனைப் பெற்றதால் ஆத்தும மரணமேயில்லை என்றோ நான் இரண்டு வகைப்படுத்துகிறேன்.

1- *உங்களது கேள்வி “நித்திய ஜீவனைப் பெற்றதால் சரீர மரணமேயில்லை என்றால்* :
ஆதி பெற்றோர் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களான பொழுதே மனிதக்குலத்தை சரீரமரணம் ஆண்டுக்கொண்டது. ஆதி. 3:17-19, ரோ. 5:12, 1கொரி. 15:22

நீ சாகவே சாவாய் என்று தேவன் சொன்னது போல அவர்கள் தேவனுடைய நேரடி தொடர்பிலிருந்து பிரிந்து ஒளித்துக்கொண்டார்கள். ஆதி. 3:8

ஆகவே, ஆதாம் ஏவாள் உட்பட மண்ணினால் பிறந்த அனைவரும் சரீர மரணம் அடையவேண்டியது நியமம். யோபு 17:13-16, ஆதி. 3:19, யோபு 21:26, 34:15,

தங்கபஸ்பம் சாப்பிட்டாலும், எந்த தவம் இருந்தாலும், காடு காடாக சுற்றி அமுதக்கனியை தேடிப்பிடித்து சாப்பிட்டாலும், அநுதினமும் பரலோகம் போய் கேஸட்டையே நேரடியாக வாங்கிவருகிற திறமைசாலியானாலும், நிமிஷத்திற்கு ஒருமுறை தேவனோடு பேசுகிறேன் என்று ஊரை நம்பவைக்கும் எந்த பேர்வழியும்; தன் சரீர மரணத்தைத் தழுவாமல் ஒருவனும் தன்னைக் காத்துக்கொள்ளமுடியாது. சங். 22:29, பிர. 3:20.

வேதவாக்கிற்கு மிஞ்சினது எதுவும் பொய்யே.

உங்கள் கேள்வி எனது இரண்டாவது அனுமானம் “நித்திய ஜீவனைப் பெற்றதால் ஆத்தும மரணமேயில்லை என்பதாயிருந்தால்” நமது கேள்வி எண் #1069ஐக் காணவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக