மரணத்தில் நடப்பவை
By : Eddy Joel Silsbee
நம்மை உருவாக்கிய பிதா தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஆவி ஆத்துமா சரீரம் – இந்த மூன்றும் சேர்ந்தது தான் நாம் (1தெச. 5:23)
மண்ணினால் சரீரத்தை தன் சொந்த கரங்களினால் உருவாக்கினார் தேவன். ஆகவே, சரீரத்திலிருந்து ஆவி பிரிந்ததும் சரீரம் மண்ணுக்கு திரும்புகிறது. பிர. 3:20, சங். 146:4, 104:29, ஆதி. 3:19
தன்னுடைய ஆவியை மனுஷனுடைய நாசியிலே ஊதி உயிர் கொடுத்தார். சரீரத்திலிருந்து பிரியும் ஆவி தேவனிடத்திற்கு திரும்புகிறது. பிர. 12:7
இரட்சிக்கப்பட்ட ஆத்துமா கிறிஸ்துவினுடைய சபையில் சேர்க்கப்படுவதால் பரதீசிலும், இரட்சிக்கப்படாமலும் கிறிஸ்துவின் வாக்கிற்குட்படாமலும் மரணிப்பவரின் ஆத்துமாவோ பாதாளத்தில் விடப்படும். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரைக்கும் காத்திருக்கவேண்டியது.. (மாற்கு 14:22, ரோ. 12:5, 1கொரி. 12:27, எபே. 1:23, 2:16, 4:12, கொலோ. 1:24, 3:15, அப். 2:47, லூக்கா 16:22-23)
கிறிஸ்துவின் வருகையிலே, எல்லோரும் அழியாத புது சரீரம் பெற்று மறுரூபமாகி நியாயதீர்ப்புக்கு நிற்கவேண்டும். (1கொரி. 15:35-58)
ஆகவே, சுவாசம் இருக்கும் போதே நித்திய ஜீவனுக்கு உரிய உத்திரவாதத்தை பெற்றுக்கொள்ள தவற வேண்டாம். அப். 22:16, மத். 10:22, எபி. 3:6, 14, 6:12, வெளி. 2:26
கர்த்தருக்கென்று காத்திருப்போம். சகலத்தையும் நன்மையாக்க அவர் ஒருவரே வல்லவர்.. சங். 5:3, 59:9, ஏசா. 30:18..
(குறிப்பு வசனங்களை வேதத்தை எடுத்து வாசித்து தியானிக்கவும்)
எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/3Rn2Qx4Zrak
Please Subscribe & Watch our YouTube Videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக