*சுயலாப ஊழியம்*
By : Eddy Joel Silsbee
கிருபையுள்ள நம் கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள்.
தன்னுடையது என்று விசேஷமாய் ஒரு பொருளையோ, ஒருக்கூட்டத்தையோ, ஒரு சாராரையோ பார்த்துக்கொள்வதால், தன்னிறைவு அடைந்து நம்பியிருக்கும் மற்றவர்களை ஏமாளியாக்கி விடுகிறது.
தான் செய்வதே நேர்த்தி என்றும் மற்றவன் செய்வதெல்லாம் ஒழுங்கீனம் என்று சொல்லும் பழக்கம் உள்ளவர்களை அறிவாளிகள் என்று உலகம் சொல்கிறது.
ஆனால் மற்றவர்களை ஊக்கப்படுத்தவோ, பயிற்றுவிக்கவோ முற்படாத பட்சத்தில், அது வேதத்திற்கு விரோதமான செயலாக முடிகிறது. ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். 1கொரி. 10:24
இருபது வகையான பழக்கங்களை பட்டியலிட்டுச் சொல்லும் பவுல், அப்படிப்பட்டவர்கள் தேவனை மறுதலிப்பவர்கள் என்கிறார். (2 தீமோ. 3:2-5)
தன் வேலை, தன் குடும்பம், தன் சொந்தக்காரர் என்பவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து அவர்கள் லாபம் அடைய வேண்டும் என்ற மனநிலையுள்ள கிறிஸ்தவர்கள் இக்காலத்தில் அதிகம் தலை தூக்கியுள்ளனர்.
சபை என்ற பெயரில் தன் மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, கொழுந்தியாள் என்று சொந்தக் குடும்ப உறுப்பினர்களைக் கூட்டி ஆள்பலம் சேர்த்துக்கொண்டு ஊருக்கு கணக்குக்காட்டி வலம்வரும் ஊழியங்கள் பெரிமளவில் வளர்ந்துவருகிறதின் உண்மைத்தன்மையை கவனிக்கவேண்டும். அவர்கள் மத்தியிலும் உண்மையாக ஊழியம் நடைபெறுகிறதா அல்லது கூட்டங்களுக்கு மாத்திரம் அவர்கள் ஆஜராகிறார்களா என்பதும் பெரிய கேள்வியே !!
சுயநலம் அதி மோசமான தன்மை… அதிலிருந்து விடுபட வேண்டும். பிலி. 2:3
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/cnEPMMvbE4k
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக