திங்கள், 15 மார்ச், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 15 Mar 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

அன்பின் ரூபமாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்ட சொன்னதன் அர்த்தம் “*பொறுமையை*” குறிக்கிறது.

 

தன்னை விரோதிக்கிறவர்களையும் ஆதாயபடுத்துவதன் நோக்கமாகவே கிறிஸ்து இருந்தார்.

 

அப்போஸ்தலர் பவுலும் கூட, எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக் குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப் போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்” என்றார். (2கொரி. 11:12)

 

தன் கொள்கையில் இல்லாதவர்களை தடுக்கவேண்டாம் என்று சொன்னார் இயேசு கிறிஸ்து.. லூக். 9:50

 

எல்லா காலத்திலும் கிறிஸ்துவை எதிர்க்க ஜனங்கள் எழுந்தார்கள்.  உணர்ந்தவர்கள், தங்கள் ஆத்துமாக்களை சம்பாதித்தார்கள். முரண்பாடு கொண்டவர்களோ விழுந்து போனார்கள் மத். 21:44

 

எமோரியரின் அக்கிரமம் நிறைவாகும் வரை இஸ்ரவேல் ஜனம் கஷ்டப்பட்டது. அக்கிரமம் மிகுதியான (நிறைந்த) பொழுது, பிடுங்கப்பட்டு போனது !!  ஆதி. 15:16

 

அன்பும், நீடிய பொறுமையும், பராக்கிரமும், பயங்கரமுமான ஜீவனுள்ள தேவனை நாம் ஆராதிக்கிறோம்.

 

அவரை போல, நாம் ஒரு போதும் எவர் மீதும், வெறுப்பு கொள்ளாமல் சகல பொறுமையோடும், ஜெபத்தோடும் இருப்போம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக