#1094 - *கானான் தேசத்தில் பிரவேசித்த நபர்கள் இருவர் மட்டும் தானா. யோசுவா, காலேப் தவிர வேறு யாரும் பிரவேசிக்கவில்லையா. விளக்கம் கொடுக்கவும்*
*பதில்* : இஸ்ரவேலர்கள் சுதந்தரிக்கும்படியான தேசத்தை பார்க்கும்படிக்கு தேவன் கோத்திரத்திற்கு ஒருவர் வீதம் 12 பேரை அங்கு அனுப்பும்படி மோசேக்கு கட்டளையிட்டார். எண். 13:2
அதன்படி மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.
அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.
சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.
யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.
இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.
எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா (யோசுவா)
பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.
செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.
யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.
தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.
ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.
நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.
காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர் இவர்களே. (எண். 13:3-16)
அவர்கள் அனைவரும் கானான் தேசத்தினுள் நாற்பது நாளளவும் சுற்றிப்பார்த்து பாளையத்திற்கு திரும்பிவந்தார்கள். எண். 13:25
தேவன் வாக்களித்தப்படி அந்த கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம் தான் என்றும் ஆனால் அங்குள்ள மனிதர்கள் இராட்சதர்கள் நாங்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம் என்று சொன்னார்கள். அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். எண். 13:25-33
அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள்.
சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.
பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். எண். 14:1-4
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.
கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள். எண். 14:6-10
இதைக்கண்ட தேவன் கோபமூண்டவராகி அனைவரையும் அழிக்க முற்பட, மோசே தேவனோடு “…. என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்று மன்றாடினார்”. எண். 14:11-19
மோசேயினுடைய மன்றாட்டின் நிமித்தம் தேவன் ஜனங்களை மன்னித்தார். எண். 14:20
அவர்கள் சடுதியில் அழிக்கப்படவில்லை ஆனால், அந்த ஜனங்களுடைய அவிசுவாசத்தின்படியே அந்த தேசத்தினுள் போக அவர்களுக்கு அநுமதிக்கப்படவில்லை. இந்த க்ஷனத்தில் கணக்கிடப்பட்டபடியாக, 20 வயதானவர் மற்றும் 20வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வனாந்திரத்திலேயே தங்கி மரிப்பார்கள் என்றார்.
தேவன் சொன்னவற்றை கவனிக்கவும்:
எண். 14:28-35 நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.
எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.
உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள். நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.
*இறுதியாக, கானானுக்குள் நுழைந்தவர்கள் யாரென்றால் : மோசேயினால் கானான் தேசத்தை வேவுபார்க்க அனுப்பப்பட்ட 12 பேரில், யோசுவாவும் காலேப் என்ற 2 பேரும், வேவுபார்த்து திரும்பி வந்த நாற்பது நாளின் போது 20 வயதிற்குட்பட்ட அனைவரும் பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை சுதந்தரித்தார்கள்*. எண். 32:11-12
பின்குறிப்பு : அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் மாத்திரம் உயிரோடிருந்தார்கள். எண். 14:36-38

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக