வெள்ளி, 16 ஏப்ரல், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 16 April 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

பராக்கிரமுள்ள தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

 

தேவ பயமும்,

வேதத்திற்கு கீழ்படிதலும்,

தேவக் கட்டளைக்கு அடி பணிவதும்,

தேவனுடைய பிரமாணத்திற்கு தங்களை ஒப்புகொடுப்பதும்

தற்போது *குறைந்திருப்பதை பரவலாக காண முடிகிறது*.

 

(தேவ) பயம் அவசியமில்லாதது என்று அநேகரது தன்னிறைவு. பணம், செல்வாக்கு, வாழ்க்கை தரம் பெறுகப்பெருக, சட்டமும் தேவக் கட்டளையும் தன் கையிலேயே இருப்பது போன்ற உணர்வு.

 

யூதா ஜனம் இப்படி ஒரு நிலையை அடைந்த போது (எரே. 8:4-17) ஆண்டவர் அவர்களை தண்டிக்க *தவறவில்லை*.

 

பழைய ஏற்பாடு நமக்கு பாடமாய் கொடுக்கப்பட்டது.

 

காலம் தாமதமானாலும், சட்ட மீறுதல் என்பது, மனம்திரும்பாத பட்சத்தில் எப்போதும் கணக்கில் வைக்கப்படுகிறது.

 

தேவனுக்கு பயந்தே நம் செய்கைகள் இருக்கட்டும்.

 

உலகம் நம்மை பரிகசித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும், தேவனிடத்திலிருந்து நமக்கு வெற்றி தேடி வரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443   

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக