*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
மகத்துவமுள்ள பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் எண்ணுக்கடங்கா புத்தகங்களை எழுதினார்கள்.
சொந்த வாழ்க்கை சீர்கெட்டு, குடிவெறியிலேயும் விபசாரத்திலேயும், பாவத்தில் விழுந்து கிடந்தாலும், அவர்கள் *எழுத்துக்களையோ அபாரம்* என்று ஊர் மெச்சிக்கொள்ளும். அரசாங்கம் சிலருக்கு விருது வழங்கியும் கவுரவிக்கும்.
எழுத்தும், பேச்சும் பிரமாதமாய் இருந்தாலும், சொந்த வாழ்க்கை சரியில்லை என்றால் என்ன பிரயோஜனம்? அதை பின்பற்றுபவர்களும் அவரை போலவே வீணாகி கனவு உலகத்தில் வாழ வேண்டியது தான்.
*பரிசுத்த வேதாகம்* ...
ஏறத்தாழ 32 பேரால், 1400 ஆண்டு காலகட்டங்களில் எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடும்..
ஏறத்தாழ 8 பேரால், 100 ஆண்டு காலகட்டங்களில் கிரேக்க/லத்தீன் பாஷையில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டை கொண்டுள்ளது..
முதல் புத்தகம் ஆதியாகமம் துவங்கி கடைசி புத்தகம் வெளிபடுத்தின விசேஷம் வரைக்கும் எழுதின அனைத்து எழுத்தாளர்களும், பரிசுத்தவான்களாய் வாழ்ந்தவர்கள், அவர்களைக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் எழுதி வைத்தார். (2தீமோ. 3:16)
கடவுள் மூலமாக, கடவுளின் ஜனங்களை கொண்டு, கடவுளை பின்பற்றதக்கதாக எழுதி கொடுத்தவை *பரிசுத்த வேதாகமம்* என்று அழைக்கப்படுகிறது.
பிழையற்றது !! பூரணமானது !! நிறைவானது !!
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2தீமோ. 3:17)
அதை படிப்பதோடு நின்று விடாமல் அதற்கு நாம் கீழ்படிந்தால் – நமக்கான ஆசீர்வாதம் நம்மை தேடி வரும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக