வெள்ளி, 8 ஜனவரி, 2021

#1065- இயேசு கிறிஸ்து எங்கே பிறந்தார்? கொட்டிலிலா வீட்டிலா?

#1065- *இயேசு கிறிஸ்து எங்கே பிறந்தார்? கொட்டிலிலா வீட்டிலா?* - இயேசு கிறிஸ்து எங்கே பிறந்தார்? லூக்கா 2:7-ல் “அவள் தன் முதற்பேறான குமாரனை பெற்று சத்திரத்தில் இடமில்லாத காரணத்தினால், பிள்ளையை துணிகளில் சுற்றி முன்னணியிலே கிடத்தினாள்” என இருக்கிறது. எனவே இயேசு கிறிஸ்து எங்கு பிறந்தார் என குறிப்பிடவில்லை. விளக்கவும்

*பதில்* : யோசேப்பு மற்றும் மரியாள் இருவரும் தாவீதின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். தங்கள் சொந்த ஊரான பெத்லகேமுக்குச் சென்றார்கள்.

மரியாள் தனது பிரசவ காலத்தை எதிர் நோக்கியிருந்ததால் இந்த அவசியமான பிரயாணம் அவ்வளவு எளிதானதல்ல.

யோசேப்பும் மரியாளும் இன்னும் தங்களது திருமண வாழ்வில் ஈடுபடவில்லை, மாறாக நிச்சயிக்கப்பட்ட சூழ்நிலையில் தான் இருந்தார்கள் என்பதை அறியவேண்டும். மத்தேயு 1:24-25, லூக்கா 2:4

அவரவர் குடிமதிப்பு எழுதப்படவேண்டும் என்று உலகமுழுவதும் கட்டளை பிறந்ததால், எல்லோரும் தங்கள் பிறந்த இடத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு (லூக்கா 2:1) கலிலேயா நாட்டிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்ற அந்த சிறிய ஊரில் கூடி வந்ததால் தங்குவதற்கு இடமின்றி (லூக். 2:7) அநேகருக்கு சிரமம் உண்டானது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும் வரை காத்திருக்க வேண்டிவந்தபோது, சத்திரத்தில் தங்க இடமில்லாததால், யோசேப்பும் மரியாளும் மிருகங்கள் அடைக்கபட்டிருக்கும் ஒரு குடிலில் தங்கியிருந்தனர். லூக்கா 2:7

முன்னணை என்ற தமிழ் வார்த்தைக்கு மூல பாஷையில் ஃபட்னே (phatnae) என்றுள்ளது. அதற்கு, மிருகங்கள் உணவருந்தும் தொட்டில் என்று பொருள். (லூக்கா 13:15, லூக்கா 2:7, 12, 16)

பிறந்த அந்த கொட்டிலில் வந்து பார்த்தது மேய்ப்பர்கள் மட்டுமே. சாஸ்திரிகள் அல்ல !! லூக்கா 2:15-16

கிறிஸ்து பிறந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு இடையில், சாஸ்திரிகள் கிழக்கிலிருந்து வந்து, விசாரித்து குழந்தை இயேசுவை மிருகங்களின் கொட்டிலில் அல்ல, அவரை ஒரு வீட்டினுள் பார்த்தார்கள். மத். 2:11, 16

தங்களது கற்பனைத்திறனால், வியாபாரத்தில் லாபம் ஈட்டும்படியாக இயேசுவை மாட்டுக்கொட்டிலில் படுக்கவைத்து, மேய்ப்பர்களையும், மூன்று சாஸ்திரிகளையும் ஓன்று சேர்த்து படமாக்கிய பெருமை சத்தியம் அறியாத ஜனங்களையே சாரும் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக