#1064- சுத்தமான அசுத்தமான மிருகம் என்று நோவா எப்படி பிரித்தார்?
ஏன் கர்த்தர் அசுத்தமான மிருகத்தை 1ஜோடு சேர்த்துக்கொள்ள சொன்னார்?
பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். ஆதியாகமம் 7:2-3
பதில் : பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை மோசே எழுதியதாக ஆதாரப்படுத்தும் அதே வேளையில், அவர் நியாயபிரமாணத்தை சார்ந்து இந்த வார்த்தைகள் அமைந்திருப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
சுத்தமுள்ள மற்றும் சுத்தமில்லாத என்ற சொற்கள் மோசேயின் சட்டத்தில் துல்லியமாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், இந்த சொற்களைப் புரிந்துகொள்வது மோசேயும் இஸ்ரவேலரும் புரிந்துகொண்ட அதே பொருளையே நமக்கும் வெளிப்படுத்துகிறது.
ஆகவே, சுத்தமுள்ளவைகள், மனிதர்களின் ஆகாரத்திற்காகவும் (வெள்ளத்திற்கு பின்பு, ஆதி.1:29-30, 9:3), பலி செலுத்துவதற்காகவும், பலுகி பெறுகுவதற்காகவும் அவசியப்படுகின்றவை மற்றும் சுத்தமில்லாத மிருகங்களின் அவசியம் வெகு குறைவானது என்பது நடைமுறை புரிதல்.
சுத்தமுள்ளவைகளின் தேவை, மனிதனுக்கு மிக அதிகமாக அவசியப்படுகிறது.
ஒரே ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்படும் ஒரு தெருவில் ஐநூறு ஆடு மாடு கோழிகள் இருப்பதை நம் வாழ்வில் காண்கிறோமே.
மேலும், சுத்தமுள்ளவைகள், சுத்தமில்லாதவைகள் என்று நோவா வெளியே கடந்து சென்று தேடி பிடித்து வரவில்லை. அவைகளை, தேவனே அனுப்பிவைத்தார் !!
ஆதி. 6:20 ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.
ஆதி. 7:8-9 தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.
எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
---------------*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக