ஞாயிறு, 20 டிசம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 20 Dec 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : *Eddy Joel Silsbee*

கர்த்தருடைய நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

சிலருக்கு ஓய்வு நாள், சிலருக்கு 7ம்நாள், பலர் *ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாள்* என்று சொல்லிக்கொள்கின்றனர்.

வேதாகமத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் அல்ல. ஒரு வாரத்தில் ஏழு நாட்களே உள்ளது. அதில் ஞாயிறு என்பது வாரத்தின் முதல் நாள். யாத். 31:15

ஓய்வு நாள் என்பது, சனிக்கிழமை. யாத். 16:26

கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளில் அல்ல, வாரத்தின் முதல் நாளில் தேவனைத் தொழுதுகொள்ளும்படி கூடிவரவேண்டும்.

பழைய ஏற்பாடு துவங்கி இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கும் வரைக்கும் ஓய்வு நாளுக்கு இருந்த முக்கியத்துவத்துவத்தை, கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பின்னர் நாம் ஏன் காண முடிவதில்லை?

*கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் தொழுது கொள்ளும்படி கூடிவர வேண்டிய அவசியம் என்ன*?

* இயேசு கிறிஸ்து *வாரத்தின் முதலாம் நாளில்* உயிர்தெழுந்தார் - மாற்கு 16:9

* அவர் உயிர்த்தெழுந்தப்பின் சீஷர்களுக்கு 6 முறை தரிசனமானது *வாரத்தின் முதல் நாளில்*  மாற்கு 16:9; மத். 28:5-9; லூக். 24:34; 24:13-15; 24:33,36 + யோவான் 20:19; 26

* இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்னர் மற்றும் அவர் பரம் ஏறும் வரை கிறிஸ்தவர்கள்  கூடினது *வாரத்தின் முதல் நாளில்*. யோவான் 20:19,26 அப். 2:1

* சபை ஸ்தாபிக்கப்பட்டது *வாரத்தின் முதலாம் நாளில்* அப். 2:1

* பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்டது *வாரத்தின் முதலாம் நாளில்* அப். 2:1-4

* முதல் இரட்சிப்பின் செய்தி பேதுருவால் சொல்லப்பட்டது *வாரத்தின் முதலாம் நாளில்* அப். 2:1,38,40-41

* சீஷர்கள் அப்பம் பிட்கும்படி கூடி வந்தது *வாரத்தின் முதலாம் நாளில்* அப். 20:7

* *வாரத்தின் முதலாம் நாளில்* பணம் (காணிக்கை) சேர்க்கும் படி கட்டளை பெற்றார்கள் 1 கொரி. 16:1-2

ஞாயிற்றுக்கிழமை – ஓய்வு நாள் அல்ல !!

ஓய்வு நாளில் கூடவேண்டும் என்ற கட்டளை சிலுவையில் முடிவு பெற்றது – ரோ. 10:4

வாரத்தின் முதலாம் நாளை விட்டு ஓய்வு நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் – அறியாமலேயே பிரச்சினைக்குள்ளாகிறோம். யாக். 2:10

வைராக்கியத்தை விட்டு வேதாகமத்திற்கு செவி சாய்ப்போம்.

இன்று கர்த்தருடைய நாள். தேவனைத் தொழுதுக்கொண்டு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும்படி கூடிவருவோம்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக