#1049 - *யோபு ஒன்றாம் அதிகாரம் ஐந்து வசனத்தின்படி என் குமாரர் பாவம் செய்து இருப்பார்களோ என்று சொல்லி அவர்களை அழைத்து அனுப்பி அவர்களைப் சுத்தப்படுத்துகிறார் என் குமாரர் பாவம் செய்து இருப்பார்களோ என்ற எண்ணம்தான் அவர்களுக்கு சோதனையை கொடுத்ததா என்று தெரிந்து கொள்ள வேண்டும் பிரதர் நன்றி*
*பதில்* : யோபுவின் வாழ்க்கையில் வந்த சோதனைக்கு, அவரது எண்ணங்கள் என்று வேதம் சொல்லவில்லை.
மாறாக, அவரது விசுவாசம் எப்படிப்பட்டது என்று அறியும்படியாக அவரது வாழ்க்கையில் சோதனை அனுமதிக்கப்பட்டது என்று யோபு 1:8-11
யோபு தன் வாழ்க்கையில், தேவனால் முழுமையான பாதுகாப்பு உடையவராக இருப்பதாக சாத்தான் பொறாமை கொண்டு, அந்த அரவணைப்பை எடுத்துப்போட்டால் தேவனை தூஷிக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறான். யோபு 1:10-11
ஒரே நாளில் தனது 10 குழந்தைகளையும் இழந்த ஒரு தகப்பனால், எப்படி கடவுளுக்கு நன்றி சொல்லமுடியும்? யோபு அதில் ஜெயித்தார் !! யோபு 1:18-20
அவரது விசுவாசம் சோதிக்கப்படுவதற்கு, அவரது சந்தேகபுத்தியல்ல, அவரது உறுதித்தன்மையை கண்டு நாம் கற்றுக்கொள்ளும்படி என்றே நாம் அறியலாம். யோபு 1:22, 1கொரி. 10:11
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
புதன், 16 டிசம்பர், 2020
#1049 - யோபு ஒன்றாம் அதிகாரம் ஐந்து வசனத்தின்படி என் குமாரர் பாவம் செய்து இருப்பார்களோ என்று சொல்லி அவர்களை அழைத்து அனுப்பி அவர்களைப் சுத்தப்படுத்துகிறார் என் குமாரர் பாவம் செய்து இருப்பார்களோ என்ற எண்ணம்தான் அவர்களுக்கு சோதனையை கொடுத்ததா என்று தெரிந்து கொள்ள வேண்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக