வெள்ளி, 3 ஜூலை, 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி - 03 July 2020



உன்னதமான தேவன் நம்மை இன்னும் பரிசுத்தப்படுத்துவாராக !

ஆதியாகமம் 1:27-30ன் படி, மனுஷன் மாமிசம் சாப்பிட கூடாது என்றும் பிரத்தியட்சமாய் 29ம் வசனத்தில் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் தேவன் கொடுத்தார் என்பதால் கிறிஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடவே கூடாது என்றார் ஒருவர்.

ஆங்காங்கே படித்துவிட்டு வேதாகமத்தை மூடி வைத்து விட்டால் இப்படி ஆகி விடும். கீழே உள்ள வசனம் இதற்கு நம்மை தெளிவு படுத்தும் :

ஆதி 9:3  நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன் என்ற கட்டளை நோவா கால பேரழிவிற்கு பின்னர் வந்ததை நாம் கவனிக்க தவறகூடாது.

இயேசு கிறிஸ்து மீன் சாப்பிட்டார் – லூக்கா 24:42-43
ஆட்டு கறியும் சாப்பிட்டார் – லூக்கா 22:8-15

எல்லாமே பரிசுத்தமான உணவு தான் – அப் 10:10-15

இருதயத்தில் பலவீனமானவர்கள் மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறார்கள். ரோ 14:2

மாம்சம் புசியாதிருக்கிறவர்களை  அற்பமாகவோ மேன்மையாகவோ எண்ணுவதற்கு ஏதுவில்லை.

மாம்சம் புசியாதிருக்கிறவர்களை குற்றபடுத்தவும் யாருக்கும் அதிகாரம் இல்லை !! ரோ 14:3

தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே.  1தீமோ 4:4

எதுவும் தீட்டு அல்ல என்று அறியவேண்டும். தீட்டு என்று எண்ணிக்கொள்ளுகிறவனுக்கே அது தீட்டுள்ளதாயிருக்கும். ரோ 14:14

தேவனுடைய கிரியையான மாம்ச போஜனத்தை அற்பமாக எண்ணவேண்டாம். எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்…

அருகாமையில் உள்ளவர்களுக்கு இடறலுண்டாகப் புசிக்க கூடாது.  அது தீமையாயிருக்கும். ரோ 14:20, 1கொரி 8:13

அனைவரையும் கிறிஸ்துவிற்கென்று ஆதாயப்படுத்துவதே பிரதான நோக்கமாயிருக்கட்டும்.

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக