#220 - *இயேசுவை வெளி நாட்டு கடவுள் என்று அனேகர் விமர்ச்சிக்கிறார்கள்.... இதற்கான பதிலை வேதத்தின் அடிப்படையில் தர முடியுமா ஐயா
*பதில்*:
சரி தானே, அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள் உள்நாட்டவர் உள்நாட்டு கடவுள் கும்பிடவேண்டும் என்று !!
நம் தேவன்/கடவுள் – சர்வ லோகத்தையும் படைத்தவர். (ஆதி. 1:31)
எல்லா உலகமும் அவருடையது. (சங். 24:1)
சகல அதிகாரமும் உள்ளவர். (மத். 28:18, எபே. 1:20-22)
எல்லா மகிமையும் அவருடையதே (1நாளா. 29:11)
இன்னும் ஏராளம் ஏராளம் ஏராளம் – சிறிதளவு சொல்லப்பட்ட இந்த யோபு 5:8-20லேயே நம் தேவனுடைய மகத்துவம் விளங்கும்.
நம் தேவன் எல்லா வல்லமையும் உடையவராகையால் :
பிள்ளை வேண்டியோ,
செல்வம் வேண்டியோ,
படிப்பு வேண்டியோ,
சக்தி வேண்டியோ அல்லது எது வேண்டுமானாலும் அவர் ஒருவரிடத்தில் மாத்திரம் கேட்டால் போதும் !!
தனி தனி இடங்களுக்கும்,
நபர்களிடத்திலும், தளங்களுக்கும், தனித்தனியே போய், தேடி, வெடி வைத்து, இரத்தம் சிந்தி, காவடி எடுத்து, மைல் மைலாக கால்நடையாய் நடந்து, நம்மை வருத்திக்கொண்டு கேட்க வேண்டிய அவசியமில்லை...
நமக்காய் இயேசுவானவர் எல்லாவற்றையும் அவரே பாடுபட்டு தீர்த்து விட்டார். அவர் *“கட்டளைக்கு கீழ்படிந்து”* அமைதியாய் அவரிடத்தில் மெதுவாய் கேட்டாலே போதும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக