#1053- *விபச்சாரம் வேசித்தனம் இப்பாவத்தின் விளைவுகள், வீழ்ந்தவர்கள் மீண்டவர்களை குறித்து வேதத்தின் அடிப்படையில் விளக்கம் தாருங்கள்.*
*பதில் :*
பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது. ரோ. 6:23
அதாவது, கடவுளின் கட்டளையை மீறுவது தவறு.
ஆதாம் காலம் துவங்கி, தவறு செய்தவுடன் எவரும் (சரீரத்தில்) மரித்துவிடுவதில்லை. அவர்கள் தேவனுடைய உறவில் இருந்து துண்டிக்கப்படுகிறார்கள் என்பதே இதன் பொருள்.
விபச்சாரம் மற்றும் வேசித்தனத்திற்கு பழைய ஏற்பாட்டு நியாயபிரமாண முறைப்படி கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். லேவி. 20:10
கிறிஸ்துவின் சிலுவை மரணத்துடன் மோசேயின் நியாயபிரமாணம் முடிவிற்கு வந்து (ரோ. 10:4, மத். 27:51) சபை துவங்கப்பட்டு, கிறிஸ்துவின் பிரமாணத்தை அப்போஸ்தலர் மூலமாக நாம் பெற்று கிறிஸ்தவர்களாக இருக்கும் இந்த புதிய உடன்படிக்கையின் காலத்தில், பழைய சட்டத்தை நாம் செயல்படுத்தவும் முடியாது, செயல்படுத்தவும் கூடாது !! இன்றும் நியாயபிரமாணம் உண்டு என்று வாதிடுபவர்கள் கவனிக்கவும்.
புதிய ஏற்பாட்டு காலத்தில்,
விபச்சாரத்தின் செயல் அதன் சொந்த தண்டனையைச் பெறுகிறது.
பாலியல் பாவம் என்பது ஒருவரின் சொந்த உடலுக்கு எதிரான குற்றமாகும் (1 கொரிந்தியர் 6:18).
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். 1கொரி. 6:18
மாம்ச இச்சைகளை விட்டு விலகவேண்டும் என்று பேதுரு அப்போஸ்தலன் எச்சரிக்கிறார். 1பேது. 2:11
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருக்க வேண்டும். வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபி. 13:4
பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடவேண்டும். 2தீமோ. 2:22
ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். ரோ. 6:12-13
விபச்சாரத்தின் விளைவுகளைப் பற்றி நீதிமொழிகள் இன்னும் விரிவாக எச்சரிக்கிறது:
மரியாதை மற்றும் வலிமை இழப்பு (நீதிமொழிகள் 5: 9–11),
பாழடைந்த நற்பெயர் (நீதிமொழிகள் 5:14),
அடிமைத்தனம் மற்றும் இறப்பு (நீதிமொழிகள் 5: 22–23),
சுய அழிவு (நீதிமொழிகள் 6:32),
மற்றும் பொறாமை கொண்ட கணவரின் பழிவாங்கல் (நீதிமொழிகள் 6:34).
மேலும்,
தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ? பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான் என்று நீதிமொழிகள் 6: 27-29ல் பார்க்கிறோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
சனி, 19 டிசம்பர், 2020
#1053- விபச்சாரம் வேசித்தனம் இப்பாவத்தின் விளைவுகள், வீழ்ந்தவர்கள் மீண்டவர்களை குறித்து வேதத்தின் அடிப்படையில் விளக்கம் தாருங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக