சனி, 19 டிசம்பர், 2020

#1052 - 2சாமுவேல் 14:27ல் அப்சலோமிற்கு மூன்று குமாரர்களும் தாமார் என்ற குமாரத்தியும் இருப்பதாக சொல்லப்பட்டிருக்க, 2சாமுவேல் 18:18ல் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்கு குமாரன் இல்லை என்று சொல்வதாக வருகிறதே? அதை விளக்கவும்.

#1052 - *2சாமுவேல் 14:27ல் அப்சலோமிற்கு மூன்று குமாரர்களும் தாமார் என்ற குமாரத்தியும் இருப்பதாக சொல்லப்பட்டிருக்க, 2சாமுவேல் 18:18ல் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்கு குமாரன் இல்லை என்று சொல்வதாக வருகிறதே?* அதை விளக்கவும்.

பதில் : அப்சலோம், உயிரோடே இருக்கையில் என்று இந்த வசனம் துவங்குகிறது.

இராஜாவின் பள்ளத்தாக்கில் தன் பெயரில் ஒரு தூணை எப்போது அல்லது எந்த சூழ்நிலையில் அப்சலோம் நிறுவினார் என்கிற தகவல் சொல்லப்படவில்லை.

ஆகவே, 3 விதமாக இந்த கேள்விக்கான பதிலை அறியமுடியும்.

1)
தூணை நிறுவின காலத்தில் அப்சலோமுக்கு குமாரர் இல்லை என்றும், தன்னை மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற பயத்தில், ராஜாக்களின் பள்ளத்தாக்கில் தனக்கென ஒரு தூணைக் கட்டியதாகவும் யூகிக்க முடியும்.

அதற்கு பின் வரும் காலங்களில் குமாரர்கள் பிறந்திருக்கலாம்.

2)
தூணை நிறுவிய போது, குமாரர்கள் ஏற்கனவே அவருக்கு பிறந்திருந்தாலும், ஒரு வேளை அந்த தருணத்திற்கு முன்பதாக அனைவரும் மரித்திருந்திருக்கலாம்.

3)
அல்லது, அவரது குமாரர்கள் தனக்கு வாரிசாக அறிவிக்க முடியாத அளவிற்கு அவர்கள் சரீர வியாதியில் அல்லது அங்ககீனத்தில் அல்லது முடங்கி கிடந்திருக்கலாம்.

தன் தந்தை தாவீதிற்கு எதிராக செயல்பட்ட அப்சலோமின் தவறான வாழ்க்கையின் பலனாக மேலே எழுதப்பட்ட 2வது அநுமானம் சரியானதாக இருக்கலாம் என்று பல வல்லுநர்கள் கருதுகிறார்கள். 2சாமு. 15:2-6, 13, 2சாமு.15-17 அதிகாரங்கள். (References Gersonides, David Kimhi, David Altshuler, Malbim)

Jonathan ben Uzziel என்பவர், பெரிய மற்றும் சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களை ஆதி அரமாய்க் மொழியில் மொழிபெயர்த்தவர், தனக்கு உயிருள்ள குமாரர் இல்லை என்பதாக சொல்லுவதை எழுதியிருக்கிறார்.

இன்னும் கூடுதல் கருத்தை இதோடு சேர்க்கவேண்டுமென்றால், 2 சாமுவேல் 14 இன் சூழலை கவனிக்கும் போது, இஸ்ரவேலில் இருந்து தல்மாய்க்கு அப்சலோம் ஓடிப்போய் தப்பியிருந்த அந்த 3 வருட காலத்தில் குழந்தைகள் பிறந்ததாக ஆதாரமற்ற தகவலும் உண்டு.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக