வெள்ளி, 2 அக்டோபர், 2020

#878 - மனந்திரும்புதல் என்றால் என்ன?

#878 -  *மனந்திரும்புதல் என்றால் என்ன?*

*பதில்* - “மனந்திரும்புங்கள்” என்ற தமிழ் வார்த்தைக்கு மூல பாஷையான கிரேக்கத்தில் மெட்டானோ.

அதற்கு: வித்தியாசமாக அல்லது அதற்குப் பிறகு சிந்திக்க, அதாவது ஒழுக்க ரீதியாக ஒருங்கிணைப்பை உணர மறுபரிசீலனை செய்யுங்கள், மனந்திரும்புங்கள், சிந்தனைக்குப் பிறகு என்று பொருள். ஒரு செயலைப் பற்றி யோசிக்கும் யோசனையை அது ஆணையிட்ட பிறகு அறிவுறுத்துகிறது. ஒரு பாவமான செயலின் விஷயத்தில், இந்த யோசனை செயலை மறுபரிசீலனை செய்வதோடு, பாவத்தைச் செய்ததற்காக வருத்தப்படுவதையும் உணரலாம்.

அந்த மனந்திரும்புதல் தவறான செயலுக்கான "துக்கத்தை" விட அதிகமாக உள்ளது. தவறான நடத்தையை நிறுத்த ஒரு தீர்மானத்தை ஏற்படுத்துகிறது.

தெய்வீக துக்கம் ஒரு தெய்வீக பதிலைச் சந்திக்கும்போது மனந்திரும்புதல் விளைகிறது.

பாவத்தை நோக்கிய நமது அணுகுமுறையையும் செயலையும் மாற்றும்போது அது நிகழ்கிறது.

செய்த பாவம் இதயத்தில் தண்டிக்கப்படும்போது / உணர்த்தப்படும் போது, நாம் துக்கப்படுகிறோம்.

“தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." (2 கொரிந்தியர் 7:10)

கிறிஸ்துவின் வசனத்தை கேட்கும் போது – நாம் இது வரை நம்மைப்படைத்த கடவுளை அறியாமல் இருந்தோமே என்றும், அவருக்கு செலுத்தவேண்டிய மரியாதையை வேறே இடத்தில் செலுத்தினேன் என்பதை உணரும்போது – மனம் வருந்துகிறது.

உதாரணத்திற்கு : பெற்றெடுத்த அப்பா உயிருள்ளவராக அருகாமல் நின்று கொண்டிருக்க, அதை அறியாமல் வேறொரு படத்தை வைத்துக்கொண்டு – அதை பார்த்து ‘அப்பா, அப்பா’ என்று பல வருடங்களாக சொல்லிக்கொண்டிருக்கும் போது – இவர் தான் உண்மையான அப்பா என்று அறியும் போது நம் மனம் எப்படியிருக்கும். அந்த க்ஷனத்திலிருந்து படத்தை தூர எறிந்து விட்டு உயிருள்ளவரை பற்றிக்கொள்வோம். இனி ஒரு போதும் படத்தை பார்த்து இது தான் என்னை பெற்றெடுத்த அப்பா என்று சொல்லவே மாட்டோம் – அது வரை இருந்த மனம் இப்போது உண்மையின் பக்கம் திரும்பியது !!

வாசிக்கவும் : அப் 19:18, மத் 26:75, லூக்கா 15:17-21, மத் 21:29, வெளி 2:5, 1யோ 1:9, யாக் 4:8-10

சுருக்கமாக : மனந்திரும்புதல் என்பது, தேவனுக்கு பிரியமில்லாத அனைத்தையும் விட்டு புதிய பாதையில் பிரயாணிப்பதாகும்.

மனந்திரும்புதலுக்கு பின், கிறிஸ்துவின் கட்டளையான ஞானஸ்நானத்திற்கு கடந்து செல்லும்போது, அந்த க்ஷனம் வரை செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இரட்சிக்கப்படுகிறோம். அப். 2:38, மாற்கு 16:16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக