புதன், 28 அக்டோபர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 28 Oct 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

சர்வத்திற்கும் மேலான நம் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

அவருடைய சமூகத்தில்:
நம்மை நாமே தாழ்த்த வேண்டும்;
பரிசோதித்துக்கொள்ள வேண்டும்;
சுயதவறுகளை உணர்ந்து தூய்மைப்படுத்தும்படி தேவனிடத்தில் மன்றாட வேண்டும் என்றால், எது அவருடைய சமூகம்?

இரட்சிக்கப்பட்டவரின் உள்ளத்தில் அவர் வசிக்கிறவராயிற்றே? 2தீமோ 1:14

சொந்த விருப்ப வாழ்க்கை ஒருபக்கம், பரிசுத்த வாழ்க்கை இன்னொரு பக்கம் என்று இருவேறு வாழ்க்கை வாழ கிறிஸ்தவம் அனுமதிப்பதில்லை.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கேட்டு, விசுவாசித்து, மனந்திரும்பி, பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது, அந்நேரம் வரை செய்த பாவங்களை தேவன் நமக்கு மன்னிக்கிறார். அப் 2:36-38, 22:16

நம் பாவங்களை *நாமே கழுவிக்கொள்ளவும் முடியாது* !!

பாவ வாழ்க்கையிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு,
புண்ணியர் என்று தன்னை அழைத்துக் கொள்பவரிடம் பாவங்களை அறிக்கை செய்வதாலோ,
மலை மலையாக ஏறி இறங்குவதாலோ,
பல மைல் தூரம் நடந்து செல்வதாலோ,
தலைமுடியை, மீசை, தாடியை சவரம் செய்துக்கொள்வதாலோ,
கோடி கோடியாக வெள்ளியும் பொன்னும் கொட்டிக் கொடுத்தாலும்,
எந்த சுய முயற்சியிலும்,
சொர்க்கத்தில் அரை சதுரஅடி கூட நம்மால் வாங்கிவிட முடியாது.

மாறாக, பாவ வாழ்க்கையை உணர்ந்து, நம்மை படைத்த கடவுளை அறிந்து அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து, அவருடைய செயல்படி நடந்தால், அவரே அதை இலவசமாக தருகிறார். மத் 28:18-20, யாக் 1:12

எவ்வளவு எடுத்துச் சொன்னாலும்,
சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல்,
*மற்றவரை எப்படி குற்றம் பிடிக்கலாம் என்ற நோக்கில்,
எப்போதும் சுய கொள்கையை பற்றிக்கொண்டு*,

தங்கள் கொள்கையில் இல்லாத குழுக்களில், குற்றம்பிடிப்பதற்காகவே இணைந்து, சொந்த வாழ்க்கையை வீணடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

உண்மையை உணர்ந்து, மனந்திரும்பாவிடில், ஜீவன் (சுவாசம்), சரீரத்தை விட்டுப் போகும் போது எவரும் உதவிக்கு வரப்போவதில்லை !!

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்தவர்களையல்ல,
ஞானஸ்நானம் எடுத்து இரட்சிக்கப்பட்டவர்கள்,
தாங்கள் அறிந்தே மற்றவருக்கு தீங்கு இழைத்திருப்பின், நேரடியாக நாமே முன்சென்று ஒப்புரவாக வேண்டும் !! [மத் 5:24]

அல்லது, மற்றவர், நம் மீது தவறு இழைத்து அதன் நிமித்தம் இருவருக்கும் மனஸ்தாபம் இருந்தாலும் நாமே முந்திக்கொண்டு ஒப்புரவாக வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நம் மன பாரம் குறைந்து விடும் !! [மத் 18:15]

பரிசுத்தத்தின் தேவனை நாம் ஆராதிக்கிறோம் !!

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக