புதன், 21 அக்டோபர், 2020
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 21 Oct 2020
தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee
சமாதான காரணராகிய இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இருவரும் ஒரு சரீரம் என்றும்,
இருவரும் ஒன்றாய் இருக்கிறார்கள் என்றும்,
கணவன் மனைவியைக் குறித்து வேதம் சொல்கிறது. ஆதி 2:24, மாற்கு 10:8
ஆனால், எண்ணத்திலோ, அல்லது ஒரு காரியத்திலோ,
கணவன் - ”ஆம்” என்றால்,
மனைவி - ”இல்லை” என்று சொல்லும் எதிர்மறை எண்ணமே அநேக வீட்டாளின் நிலைபாடாயிருக்கிறது.
இருவரின் கருத்துக்களோ வெவ்வேறாய் இருக்கிறது.
அமெரிக்கா ஜனாதிபதியும்,
ரஷியா அதிபரும்,
இந்திய பிரதமரும்,
அண்டை நாடுகளும், சமாதானமாக வாழவேண்டும் என்று தினமும் ஜெபம் பண்ணுகிவர்கள் சொந்த குடும்பம் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்று முற்படுவதில்லை !!
அருகாமையிலிருக்கும் கணவனையோ மணைவியையோ உதாசீனபடுத்தினால் – குடும்பத்தில் சமாதானம் எங்கிருந்து வரும்?
கணவன் தன் மனைவியை கனம் பண்ணாமலும்,
அன்பு செலுத்தாமலும்,
மனைவி தன் கனவனை மதிக்காமலும்,
நேசிக்காமலும் இருந்தால் – ஏறெடுக்கும் எந்த ஜெபமும் வீண். யாக் 4:2-3
அவள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று எலிசபெத்துவிடம், ஜனங்கள் கேட்கும் போது, ”யோவான்” என்றதை சகரியாவும் ஆமோதிக்கிறார். !! (லூக் 1:60).. கணவன் சொன்னதை மனைவியும், மனைவி சொன்னதை கணவனும் இப்படி கருத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள்.
ஒரே வீட்டில் வசிப்பதால் ”குடும்பம்” என்று மற்றவர்கள் சொல்லலாம்..
கணவனும் மனைவியும் அன்போடும் நேசதோடும் ஒரே இருதயமாய் இருக்க வேண்டும் என்பது தேவனுடைய திட்டம்.
அவருடைய வார்த்தைக்கு கீழ்படியும் போது அந்த குடும்பம் ஆசீர்வாதம் பெறுகிறது. சங் 128:3, 6, 1 சாமு 1:5, 20, 2:20-21
Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக