புதன், 28 அக்டோபர், 2020

#1028 - சுவிசேஷம் என்றால் என்ன?

#1028 - *சுவிசேஷம் என்றால் என்ன*?  சுவிசேஷம் என்ற சொல்லின் மற்றும் பொருளின் சரியான வேத விளக்கங்களை தாருங்கள். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் உதவியோடு பதில் அளிக்கவும்.  சுவிசேஷம் என்றால் என்ன என்ற பூரண சத்தியம் அறியாத சபையின் தலைவர்கள் முதலில் முழுமையை புரிந்து கொள்வார்கள்… பிரசங்கிப்பார்கள் மற்றும் புறக்கணியாமல் இருப்பார்கள்.

*பதில்* :
விசேஷம் என்றால் செய்தி என்று பொருள்.

சுவிசேஷம் என்றால் நல்ல செய்தி என்பது.

இந்த சுவிசேஷம் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் 110 வசனங்களிலும், பழைய ஏற்பாட்டில் 7 வசனங்களிலும் வருகிறது.

சுவிசேஷம் அல்லது நற்செய்தி என்பது இரண்டும் ஒரே அர்த்தம் கொண்டவை.

கிரேக்க பெயர்ச்சொல்லான யுவாங்கிலியன் என்ற வார்த்தை கிரேக்க புதிய ஏற்பாட்டில் 76 முறை வருகிறது.

“நற்செய்தியைக் கொண்டுவருவது அல்லது அறிவிப்பது” என்ற அர்த்தத்தில் “நற்செய்தி”, மற்றும் அதன் வினைச்சொல்லாக யுவாங்கெலிசோ என்ற வார்த்தை 54 முறை நிகழ்கிறது.

இரண்டு சொற்களும் ஏஞ்சலோஸ், என்ற பெயர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்டவை. அதற்கு “தூதர்” என்று பொருள்.

பழங்கால கிரேக்க மொழியில், யுவாங்கெலோஸ் என்பது, வெற்றியின் செய்தியை அல்லது மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு செய்தியைக் கொண்டுவந்தவர் என்று பொருள்.

கூடுதலாக,
யூவாஞ்சிலிசோமாய் (வினைச்சொல்லின் நடுத்தர குரல் வடிவம்) "மகிழ்ச்சியின் தூதராக பேசுவது, நற்செய்தியை அறிவிப்பது" என்பதாகும்.

வேதத்தில் சொல்லப்பட்ட சுவிசேஷம் அல்லது நற்செய்தியைக் குறித்து கவனிப்போம்.

நல்ல செய்தியை ஒருவர் சொல்கிறார் என்றால் அவர் முழுமையாகவே சொல்கிறவர். அரை நல்ல செய்தியை எவரும் சொல்வதில்லை. அவ்வாறு சொல்பவர்கள், உண்மையை அறியாதவர்கள் என்பது நமக்கே தெரியும். அதே வேளையில், முழு சுவிசேஷத்தை நாங்கள் சொல்கிறோம் என்று மற்றவர்களை அரைகுறையாக்குபவர்களும், சுவிசேஷத்தின் முழுமையான அர்த்தத்தை அறியவேண்டிய அவசியம் உள்ளது.

மாற்கு 16: 15 ல் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி இயேசு சொன்னபோது, ​​அவர் என்ன சொன்னார்?

“நற்செய்தி” என்ற வார்த்தையின் அர்த்தம் “நல்ல செய்தி”. என்ன நல்ல செய்தியைப் பெறுகிறோம்?

”*கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி*”
முதல் நான்கு புத்தகங்கள் சுவிசேஷ புத்தகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  ஏனென்றால் அவை, கடவுள் உலகிற்கு வருவதைப் பற்றிய கணக்கைக் கொடுக்கின்றன - மாற்கு 1: 1

கடவுள் மனிதர்களிடையே வாழ்ந்தார் என்ற அற்புதமான செய்தி - யோவான் 1:14

இது ஒரு மனிதனின் வரலாறு மட்டுமல்ல, தேவனுடைய குமாரன் நமக்காகச் செய்த நற்செய்தி - 1 கொரிந்தியர் 15: 1-4

இயேசுவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவை சுவிசேஷத்தின் அடிப்படை.

பாவநிவாரணமாக இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் - 1 யோவான் 4: 9-10

அவருடைய பலியை பிதாவானவர் ஏற்றுக்கொண்டார் என்பதை அவருடைய உயிர்த்தெழுதல் நிரூபிக்கிறது - ரோமர் 4: 23-25

நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுப்பப்படுவோம் என்று நாம் நம்புவதற்காக அவர் எழுந்தார் - 1 கொரிந்தியர் 15: 20-23

இயேசுவின் மூலம் பிதாவாகிய தேவன் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தார் - ரோமர் 6:23

சுவிசேஷம், கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துகிறது - 2 கொரிந்தியர் 4: 4

”*ராஜ்யத்தைப் பற்றிய நல்ல செய்தி (சுவிசேஷம்)*”
இயேசு அதைப் பிரசங்கித்தார் - மாற்கு 1: 14-15

ஒவ்வொரு தேசத்திலிருந்தும் மனிதர்களை தம்முடைய சிறப்பு மக்களாக கடவுள் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது அற்புதமான செய்தி - ஏசாயா 49: 6-8

இரட்சிப்பு, புறஜாதியினருக்கு வழங்கப்பட்டது - ரோமர் 15:15-16

அனைவரையும் ராஜ்யத்திற்குள் கொண்டு வரவேண்டியது. - எபேசியர் 2: 11-13

இது ஆபிரகாமுக்கு எல்லா வழிகளிலும் பிரசங்கிக்கப்பட்டது - கலாத்தியர் 3: 8

நற்செய்தியால் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். - 2 தெசலோனிக்கேயர் 2:14

”*கடவுளின் கிருபையின் நற்செய்தி*"
நற்செய்தி என்பது, இரட்சிப்பின் செய்தி - அப்போஸ்தலர் 20:24, எபேசியர் 1: 13-14

மக்களைக் காப்பாற்ற கடவுள் பயன்படுத்தும் சக்தி இது - ரோமர் 1: 15-16

கிறிஸ்தவர்களாகிய நாம் சுவிசேஷத்தின் மூலம் பிறந்திருக்கிறோம் - 1 கொரிந்தியர் 4:15

"*கடவுளின் போதனையின் நற்செய்தி*"
இந்த சுவிசேஷத்தையே கிறிஸ்தவர்களாகிய நாம் நம்புகிறோம் - மாற்கு 1:15

இதற்காகவே பலர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மரித்தார்கள் - மாற்கு 8:35

இதற்காகவே பலர் சகலவற்றையும் கைவிட்டார்கள் - மாற்கு 10: 29-30

இதற்காகவே மக்கள் வாழ்ந்ததை அறிக்கையிட்டார்கள். - 2 கொரிந்தியர் 9:13

"*இது எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட்டது*”
இயேசு அதைப் பிரசங்கித்தார் - லூக்கா 20: 1

அப்போஸ்தலர்கள் அதைப் பிரசங்கித்தனர் - அப்போஸ்தலர் 8:25; 14: 7, 21; 16:10

பிரகடனப்படுத்தப்பட்டது - பிலிப்பியர் 1:17

இது கடவுளின் வார்த்தை - ரோமர் 10: 15-18

அது உண்மையானதாயிருக்கிறது - யோவான் 17:17

நற்செய்தியின் சத்தியத்தின் வார்த்தை - கொலோசெயர் 1: 5

எந்த அரசாங்களும், மதங்களும், எதிர்க்கும் ஜனங்களும், கிறிஸ்தவ மதப்பிரிவுகளும், முழுமையாய் போதிக்கிறேன் என்று தங்களை கூறிக்கொண்டாலும், உண்மையான சுவிசேஷத்தை எவராலும் மாற்ற முடியாது - கலாத்தியர் 1: 6-12

விசுவாசத்தின் கீழ்ப்படிதலைக் கொண்டுவருவது வெளிப்பட்டது - ரோமர் 16: 25-27

இது பாவத்தை உணர்த்துகிறது - 1 தீமோத்தேயு 1: 8-11

இஸ்ரவேலருக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் அதிலிருந்து பயனடையவில்லை - எபிரெயர் 4: 2

"*நற்செய்தி என்றால் - அது கடவுளுடைய வார்த்தை - 1 பேதுரு 1: 22-25"*
நம்மை நியாயந்தீர்ப்பது இந்த சுவிசேஷமே !! ரோமர் 2:16

இந்த சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாதவர்கள், தண்டனைக்கு தப்பமுடியாது. பரலோகத்தை இழந்து விடுவார்கள். - 2 தெசலோனிக்கேயர் 1:7-8

நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 1 பேதுரு 4:17

"*இரட்சிப்பு என்பது எதில் இருந்து காப்பாற்றப்படுவது?"*
நாம் அனைவரும் பாவம் செய்கிறோம் - ரோமர் 3:23

கடவுளின் சட்டங்களை மீறுவது பாவம் - 1 யோவான் 3: 4

நற்செய்தி என்பது, பாவத்தின் உலகளாவிய பிரச்சினையினின்று எவ்வாறு தீர்க்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு நபரும் எவ்வாறு பாவத்திலிருந்து மீட்க முடியும் என்பதற்கான செய்தி.

இந்த நற்செய்தியால் காப்பாற்றப்பட்ட கலாத்தியர் வேறு ஒரு நற்செய்தியைப் பின்பற்றி வருவதை பவுல் கண்டு எச்சரித்தார். கலாத்தியர் 1: 6-10

"*நற்செய்தி என்பது ஒன்று தான்"*
வேதத்தில் சொல்லப்பட்ட நற்செய்திக்கு மாறாக, ஒரு தேவதூதரோ அல்லது அப்போஸ்தலரோ வேறுபட்ட ஒன்றைக் கொண்டுவந்தாலும், அவர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். கலாத்தியர் 1: 8

இக்காலங்களில் இந்த நற்செய்தி என்பதை பலரும் தங்கள் இஷ்டத்திற்கு, சுய செய்திகளை தங்கள் பணலாபத்திற்கு மாற்றிக் கொள்கின்றனர். இதைக் குறிப்பிடுவது கண்ணியமாக இருக்காது என்றாலும், வெவ்வேறு வகையில் நற்செய்திகள் என்ற பெயரில் கிறிஸ்தவ மத உலகில் உலா வருகிறது.

இரட்சிப்பின் வழிகளை இந்த கிறிஸ்தவ மதத்தினர் கீழ்வருமாறு தங்கள் இஷ்டத்திற்கு கற்பிக்கிறார்கள்.

1-விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிப்பு என்று ஒரு குழு.

2-கிருபையால் மட்டுமே இரட்சிப்பு என்று மற்ற குழு.

3-பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றால் தான் இரட்சிப்பு என்று ஒரு குழு.

4-தங்கள் சபையில் சேர்ந்தால் தான் இரட்சிப்பு என்று ஒரு குழு.

5-நாங்கள் தான் முழு சுவிசேஷத்தை சொல்வதால் இங்கு ஞானஸ்நானம் எடுத்தால் இரட்சிப்பு என்று ஒரு குழு.

இப்படி அநேகமநேகம்..
இந்த மாறுபாடுகள், சுவிசேஷத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்பதால் அல்ல.

ஒரு நற்செய்தியின் தரத்தை புரிந்து கொள்ள மக்கள் தவறிவிட்டார்கள் என்பதற்கான சான்று தான் இவைகள்.

*நற்செய்தி என்றால் உண்மையில் என்ன*?
இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் என்பதே அவர்களை மீட்டு காப்பாற்றிய நற்செய்தி என்பதை பவுல் கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு எழுதி நினைவுபடுத்தினார் (1 கொரி 15: 1-4).

கிறிஸ்தவர்கள் பாவங்களுக்கு இறப்பதன் மூலமும், ஞானஸ்நானத்தில் அடக்கம் செய்வதன் மூலமும், வாழ்க்கையின் புதிய நிலைக்கு உயர்வதன் மூலமும் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள் (ரோமர் 6: 4).

கிறிஸ்து மரித்து அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தது போல,  சுவிசேஷத்தைக் கேட்டு, இயேசுவே இரட்சகர் என்று நம்பி, தன் நிலைமையை உணர்ந்து, மனந்திரும்பி, இயேசுவே இரட்சகர் என்பதை வெளியே அறிவித்து, பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெறுவது, பாவத்திற்கு மரித்து, தண்ணீரில் அடக்கம்பண்ணப்பட்டு தண்ணீரை விட்டு வெளியே வருவது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஒப்பிட்டு - சுவிசேஷத்திற்கு கீழ்படிவதாகும்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229
Tweet @joelsilsbee

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக