வியாழன், 29 அக்டோபர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 29 Oct 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கும் நம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நம்முடைய அப்பத்தை, எப்போதும், ஒருவரும் எடுத்துக்கொள்ள முடியாது. நமக்கு என்ன கொடுக்கப்படவேண்டுமோ அது நிச்சயம் கொடுக்கப்படும்.

அதுபோலவே, தடுக்கப்பட்டதை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது.

எந்த ஒரு பொறுப்பாளனும், தனக்கு கீழே இருக்கும் நபர்களுக்கு எல்லா காரியத்திலேயும் பயிற்றுவிப்பது அவசியம்.

தன்னுடைய பதவியை தக்கவைத்துக்கொள்ள, தந்திரமாக, சொல்லயவேண்டியதை மறைத்து சூசக ஆளுமை அவசியமில்லை.

இரத்த சம்பந்தமில்லாத ஒருவர், சபையில் தலைதுாக்காமல் இருக்கும்படியும், பிரச்சனைகளை தவிர்க்கும்படியும், மற்றவர்களுக்கு அவ்வப்போது வசனம் வாசிக்கவும், ஜெபிக்கவும் வாய்ப்பு கொடுக்கும் ”உங்கள் தாராள குணத்தோடு” நிறுத்திக்கொள்ளாமல், அவர்களும் ஊழியர்களாக வளர பயிற்சி கொடுக்க வேண்டும்.

தன்னை சுற்றி துதி பாடிகொண்டிருக்கும்படி,
தன்னுடைய சீஷர்களை வளர்க்காமல்,
இயேசு கிறிஸ்து தன்னுடைய 12 சீஷரையும்,
வெளியே ஊழியத்திற்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்லியனுப்பி பயிற்சி கொடுத்தார் (மத் 10:5-30)

ஒற்றை வேருடன் வளர்ந்த ஆலமரம், தன் மரத்தை சுற்றி விழுதுகளை தரை மட்டும் விழ செய்து, அவைகளும் வேராக வளர்ந்து காலூன்றி நிற்கும்போது, ஆதி வேர் தளர்ந்தாலும், சுற்றியுள்ள வேரானது, முதல் உறுவெடுத்த வேரைத் தாங்குகிறதல்லவா?

இயேசு தனி ஒருவராக வந்து, 12 பேரைத் தேர்ந்தெடுத்து, அவை 120ஆக வளர்ந்து, 3000 என்றும் (அப் 2:41), பின்பு 5000 என்றும் (அப் 4:4), பின்பு எண்ணுக்கடங்காத திரளான (அப் 5:14) வளர்ச்சியை கிறிஸ்தவம் பெற்றது.

துரைகளுக்கு கணக்கு காண்பித்து,
தன் மாத வருமானத்தை தக்கவைத்துக்கொள்ளும்படியாக,
சொந்த இரத்தபந்தங்களையே ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணிக்கையாக காண்பிக்கும் சுய கவுரவ ஊழியத்தின் வலையிலிருந்து வெளியே வந்தால், *சபைகள் வளருவதைவிட சபை வளரும்* !!

தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். ரோமர் 2:6

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக