#1021 – *ஏசாயா புத்தகத்தை குறித்து விளக்கவும்*.
*பதில்*: வேறெந்த புத்தகங்களைக் காட்டிலும் ஏசாயாவின் புத்தகமானது அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஒன்றாகும்.
இந்த புத்தகத்தில் இரண்டு தனித்துவமான பிரிவுகள் உள்ளன:
முதல் 39 (1-39) அதிகாரங்கள் ஓர் பிரிவாகவும், மீதமுள்ள 27அதிகாரங்கள் (40-66) ஒரு பிரிவாகவும் உள்ளதால் இது இரண்டு வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்டது என்று சிலர் சொல்ல வழிவகுத்தது.
66 புத்தகங்களை கொண்ட வேதாகமத்தைப்போல இது 66 அதிகாரங்களாக கொண்டுள்ளதால், இது ஒரு மினி வேதாகமம் என்றும் வல்லுனர்கள் அழைப்பதுண்டு.
அதோடு நின்றுவிடாமல், சுவாரஸ்யமான இன்னும் இரண்டு தகவல்களையும் அறியவும்.
பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளது போலவே, ஏசாயாவின் முதல் 39 அத்தியாயங்கள், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மையமாகக் கொண்டும், புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்கள் போல, ஏசாயாவின் கடைசி 27 அத்தியாயங்கள் எதிர்காலத்தை மையமாகவும் கொண்டிருக்கிறது. இரண்டு தனித்தனி பரிவாக காணப்பட்டாலும் எழுதும் பாணி மிகவும் ஒத்திருக்கிறது.
முதல் முப்பத்தொன்பது அத்தியாயங்கள் நீதியையும், பரிசுத்தத்தையும், கடவுளின் நீதியையும் இஸ்ரேலின் நியாயத்தையும் கையாள்கின்றன.
கடைசி இருபத்தேழு அத்தியாயங்கள், கடவுளின் மகிமை மற்றும் இரக்கத்தைக் கையாளுகின்றன, மேலும் இரட்சிப்பில் மேசியாவின் பங்கைப் பற்றி விவாதிக்கின்றன.
ஒரு தீர்க்கதரிசியாக ஏசாயாவின் பணி 40 ஆண்டுகளை உள்ளடக்கியதும், யூதாவின் நான்கு மன்னர்களின் ஆட்சிகளை உள்ளடக்கியதுமாயிருக்கிறது - ஏசாயா 1:1
ஏசாயாவின் மனைவி ஒரு தீர்க்கதரிசி - ஏசாயா 8:3
அவருக்கு குறைந்தது இரண்டு மகன்கள் இருந்தனர் - ஏசாயா 7: 3; 8: 3-4
“ஏசாயாவின் முன்னுரை” :
யூதாவை குறித்த கண்டனம் - ஏசாயா 1-12
பிற நாடுகளைக் குறித்த கண்டனம் - ஏசாயா 13-23
கர்த்தருடைய நாள் - ஏசாயா 24-27 (தீர்ப்பு - ஏசாயா 24, வெற்றி - ஏசாயா 25-26, கடவுளின் திராட்சைத் தோட்டத்தின் மறுமலர்ச்சி - ஏசாயா 27)
துயரங்களும் ஆசீர்வாதங்களும் - ஏசாயா 28-35
தற்போதைய வரலாறு - ஏசாயா 36-39
எதிர்காலத்தின் ஆறுதல் - ஏசாயா 40-66
“ஏசாயா தேவ மக்களின் மீட்பின் தீர்க்கதரிசி”
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக