*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
எப்போதும் நம்மை ஆசீர்வதிப்பதே தமது சித்தமாய் கொண்டிருக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அவரை தேடும் போது நமக்கு உதவுபவர்.
கூப்பிடும் போது நமக்கு செவிசாய்ப்பவர்.
ஆபத்தில் அகப்படும் போது நம்மை தப்புவிப்பவர்.
நாம் அவரை அறிந்திருக்கிறபடியால் நம்மை மேன்மை படுத்துபவர்.
ஆனால், நாம், “அவரை” எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்?
தன்னுடைய நேரத்தையோ, பணத்தையோ, செல்வாக்கையோ அல்ல, இயேசு கிறிஸ்து நமக்காக தன் உயிரையே கொடுத்தார்.
தேவனாக, ஆண்டவராக, நண்பனாக, மூத்த சகோதரனாக, அப்போஸ்தலனாக – இப்படி எல்லா கோணங்களிலும் உதவியவர்.
அவரை உத்தமமாய் தேடும் போது நமக்கு இரங்குவது மாத்திரமல்ல, நம்மை உயர்த்தவும் செய்கிறார்.
“அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” 91:15
நாம் வேண்டும் போது கேட்கவும்,
கதறும் போது செவிசாய்க்கவும்,
துவளும் போது நமக்காய் இரங்கவும்,
இப்படி தன் மகத்துவத்தை நமக்கு செயலில் காண்பிப்பவர்.
மரித்துப்போனவரையல்ல... ஜீவனுள்ளவரை நாம் தொழுதுகொள்கிறோம் !!
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
சனி, 10 அக்டோபர், 2020
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 10 Oct 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக